பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
200


குவளை அகவிதழ் கொண்டு அவ்விதழ்த் தடிப்பில் பூசியதாகத் இாட்டுகின்றது. (இவ்வாறு தாமரை இதழாலும் பூசிக் கொள்: துண்டு) இவ்வாறு பலவகைகளிற் சிறந்த செங்கழுநீர் கடவுளர்பால் ஒரு சிறப்பும் பெற்றது. பொதுவாகச் சிவபெருமான், r 器莎 ... ... ... ... ...கழுநீர் மாலை

  • * * * *

ஏலுடைத் தாக எழில்பெற அணி' வார். இதனிலும்

இன்னியற் செங்கழு நீர்மலர்' -அவர் தலையில் இருப்பதைப் பார்த்து இறைக்காதல் கொண்ட ஒருத்தி

என்றலை எய்துவது ஆகாதே’ என்று மாணிக்கவாசகர் சொல்லிக் கொடுக்கப் பாடினாள். திருவாரூரிலுள்ள கடவுளர் திருமேனிக்குத் தியாகராசர் என்று பெயர். இத்திருமேனி பற்றி ஒரு கதை உண்டு. தமிழ் நாட்டு முசுகுந்தச் சோழன் இந்திரன் வேண்டிக் கொள்ள அவனுக்காகப் போர்செய்து வெற்றி தேடித் தந்தான். மகிழ்ந்த இந்திரன் தனது நகர்க்கு அழைத்தான் பாராட்டினான். வேண்டி யதைக் கேட்குமாறு வேண்டினான். சோழன் இந்திரன் வைத்து வழிபடும் தியாகராசர் திருமேனியை-பொன்படிமத்தைக் கேட்டான். இந்திரனுக்கு மனமில்லை. ஒரு வஞ்சம் செய்தான். அப்படி வத்தைப் போன்று மேலும் ஆறு படிவங்களை வேறுபாடு தெரி யாமல் உருவாக்கி வரிசையாக வைத்து ஒன்றை எடுத்துக் கொள்ளச் செய்தான். இதில் இவன் பக்கம் இருந்த சிவபெருமான் 'இந்திரன் வழிபடும் உண்மைப் படிவத்தின்மேல் செங்கழுநீர்ப் பூ இருக்கும். அந்த அடையாளத்தால் உண்மைப் படிவத்தைக் கொள்' என்றாராம். அதன்படியே பெற்றான் என்பர். இதன் அறிகுறியாக இன்று திருவாரூர்த் தியாகேசர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செங்கழுநீர்ப்பூ படைக்கப்படுவ துண்டு. அதற்கென்று அக்கோவிலிலேயே செங்கழுநீர் ஓடை ஒன்றுஇருந்ததாம். இப்போது இல்லாமையால் அண்மையில் உள்ள சிற்றுாரிலுள்ள செங்கழுநீர்ச் சிற்றோடையிலிருந்து நாள் தோறும் ஒரு பூவைக் கொணர்ந்து சூட்டுகின்றனர்.