பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
202


நீர்கால் யாத்த நிறையிதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடா தாகும்’1 எனக் கூறுகின்றது: நீர் அற்ற குளத்தினை நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். ஆனால், கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் ஒட்டி உறவினின்று கிளைக்கும் என இக்குடும்பத்தின் பெருமை பேசப்படும். - பரிசிலர்க்கு வழங்கப்படும் பரிசில்களில் விருதுடன் வழங்கப் படுவது பொன்னாற் செய்யப்பட்ட பூக்கள். இப்பொன் உருவில் குவளையும் இடம் பெற்றது. இவ்வாறு குவளை உருவிற்செய்யப்படுவது 'பூவாக் ஆவளை'2 எனப்பட்டது. இப் பொன் குவளையை வெள்ளிநாரில் கட்டித் தலையில் சூடிக்கொள்ளக் கண்ணியாக வழங்குவர். பொன் பூவை வெள்ளி நாரில் மாலையாக்கி அணிகலனாகவும் வழங்குவர். இக்குவளைமலர் வடிவம் கட்டடங்களிலும் சிற்பங்களிலும் வடிக்கப்படும். பெரும் வளமனைகளிலும் அரண்மனைகளிலும் இரட்டைக் கதவுகளின் பிடியாக இவ்வடிவம் செய்யப்பட்டதை நெடுநெல்வாடை காட்டுகின்றது. அஃதும் புதிதாக மலர்ந்த தோற்றத்தில் வடிக்கப்படும் என்பதை.

புதுபோது அவிழ் குவளைப் பிடிகள் அமைத்து' எனக் கூறியுள்ளது, -

ஆம்பற் குடும்பத்தில் குவளையும் அக்குவளையில் செங்கழு நீரும் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளன. இனியும் அதிகம் புகழ்ந்தால் நானத்தால் 'குவளைக் கவிழ்ந்து நிலன் நோக்கும்" என்று திருவள்ளுவப் பெருந்தகையே கூறுவதால் விடுப்போம். குழுதப் பெயர் ஆம்பல் குடும்பத்திற்குப் பின்காலத்தே அமைந்த சொல் குமுதம் எனக் கண்டோம். இப்பெயரும் இரவில் மலரும் குறியீடாக அமைந்தது. இப்பெயர் பொதுவாக அமைந்து பலவற்றிலும் இடம் பெற்றது. - - 1 குறு : 388 - 2 பனிநீர்ப் பூவா மணிமீடை குவளை . . வால்தாச்த் தொடுத்த * யும் கலனும் -புறம் ; 153 : 7, 8. 8 நெடு. வா : 81.