பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208


றிருக்கும். ஆலம்பழ, அத்திப் பழ விதைகள் போன்று. ஆயிரக் கணக்கில் இருக்கும். இது அல்லி அரிசி" 1 எனப்படும். இதனை எளிய மக்கள் பச்சையாகவே தின்பர். பூத்த மலரைப் பறித்து அதன் பொகுட்டைக் கடிப்பர். மேல் மூடிபோன்று பொதிந்துள்ள பட்டையைப் பெயர்த்து எடுப்பர். உள்ளே அமைந்த அரிசியாம் விதையைத் தின்பண்டம் போன்று தின்பர். சிறுவர் சிறுமியர் மட்டுமன்றி முதியோரும் தின்பர். பச்சையாக அன்றிக் காயவைத்து அரிசியாக்குவர். பொகுட்டை எடுத்துப் பிளந்து காயவைத்தால் காய்ந்ததும் சிறு வெள்ளை அரிசி கிடைக்கும். இவ்வாறு குளநெல்லுடன் இதனையும் வீட்டு முன்றிலில் காயவைத்ததை, "மெல்லிரல் மெலியக் கொய்த குளதெல்லும் விளைந்த ஆம்பல் அல்லியும் உணங்கும் மூன்றில்' எனச் சீவக சிந்தாமணி கூறுகிறது. இவ்வாறு காயவைத்துப் பக்குவப்படுத்திச் சேர்த்து வைத்துக்கொண்டு வேண்டும்போது ஆவியில் அவித்தோ அரிசி யாகவோ உணவாகக் கொள்வர். பக்குவப்படுத்தப்பட்ட உணவரிசி அல்லி அரும்பதம் 3 எனப்படும். அஃதாவது அல்லிச் சோறு-அல்லி உணவு எனலாம். தமிழகத்தார் ஆண்டில் மாறும் ஆறு பருவங்களில் கால மாற்றத்திற்கு ஏற்ப உணவு வகைகளையும் மாற்றிக் கொள்வர் கூதிர்ப் பருவம் மாறி முன்பணிப் பருவத்தில் இந்த 'அல்லி அரிசி'யை உணவாகக் கொள்வதைச் சீவக சிந்தாமணியால் அறியலாம். இப்பழக்கம் வளமான இல்லத்தாரிடையே உள்ளதாகக் கூறப்படுவதால் அல்லி உணவு எளியவரோடு செல்வராலும் விரும்பப்பட்ட ஒன்றாக அறிய முடிகின்றது. . இவ்வரிசி உணவு நெய்ப்போ, கொழுப்போ இல்லாதது. புலன் உணர்ச்சிகளைத் துரண்டாதது. புலன் அடக்கத்திற்குத் துணையாகும்.உணவு. இதனால், கைம்பெண்கள் இவ்வுணவை அன்றாட உணவாகவே கொள்வர். கைம்பெண்கள் அணிகலன் 1 'ஆர்ந்த நீர் விளைந்த வல் விளைவு அரிசி - சிவ சி: 282 2. சிவ. 355, - ? - 8 சிவ. சி. 2682