பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209


கள் யாவற்றையும் கழித்தவர் ஆதலின் கழிகல மகளிர்' எனப் படுவர். அன்னார் உப்பு, இனிப்பு நீக்கியே உண்பர். நெய்ப் புள்ளதையும், கொழுப்புள்ளதையும் உண்ணார். எனவே, அவருக்கு ஏற்ற உணவாயிற்று. "சிறுவெள் ளாம்பல் அல்லி உண்ணும் கழிகல மகளிர்'T எனப்பட்டனர். வீரத் தலைவர்கள் போரில்பட்டு இறந்ததால் அவர்தம் நகரம் பொலிவு இழந்திருப்பதைப் பாடும் தாயங்கண்ணி யார் என்னும் புலமை அம்மையார் இக்கழிகல மகளிரது உணவைக் காட்டி, 'கூந்தல் கொய்து குறுந்தொடி நிக்கி அல்லி உணவின் மனைவியோ டினியே புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்'2 எனத் துயரத்துடன் பாடினார். துறவியர் இயற்கை உணவுகளையே உண்பர். சமைத்த வற்றை உண்ணார். காய், கனி, கிழங்குகளுடன் இந்த அல்வி உணவை உண்பர். சீவகன் துறவை மேற்கொண்டான். அவனுடன் அவனது தாய் விசயையும் துறவை மேற்கொண்டாள். துறவுநிலைக்கேற்ற உணவுகளை ஊர்க்குடிமக்கள் கொடுத்துதவினர். அவற்றில் 'அல்லி அரும்பதம்’ ஒன்று. அவ்வுணவுப் பட்டியலில் அல்லி உணவே முதலில் உள்ளது. . 'அல்லி அரும்பதமும் அடகும் காயும் குளநெல்லும் நல்ல கொழும்பழனும் கிழங்குந் தந்து நவைதீர்த்தார்க்கு” விசயை உரிய கைமாறு செய்ய முடியவில்லையே என்றுஏங்கினாள். இறுதியாகத் தான் அருகக் கடவுளை வழிபட்டதால் கிடைக்கும் பயனையெல்லாம் ஈந்தாளாம். - இவ்வாறு அல்லி உணவு பல்வகை மக்கட்கும் பயன் பட்டது. உணவென்றால் பக்கத்துணையாகக் கறிவகை வேண்டா ,2602 : சிவ. சி 8 6 سا؛ : 250 : up ii 2 张14