பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210


வோ? கைம்பெண்களுக்கும் துறவியர்க்கும் வேண்டியதில்லை. மற்றவர்க்கு அவியல் கறி உண்டு. இலைகளை வேகவைத்த கறி அடகுக் கறி எனப்படும், இலைகளை-கீரைகளைப் போலவே, ஆம்பல் பூவின் இதழ்களை அவித்து அவியலாகப் பயன்படுத் தினர் என அறிகின்றோம். அடகுக் கறி என்பது ஏழை எளியவர்க்கு எளிதிற் கிடைப்பது. வளம் இல்லாத காலத்துக் குப்பைக் கீரையும் உணவாகும். பாரியின் பறம்புநாடு மூவேந்தரால் முற்றுகையிடப்பட்டது. உள்ளே அகப்பட்ட மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு நேர்ந்தது. கபிலர் கிளிகளைக்கொண்டு வெளியிலிருந்து, 'செழுஞ்செய் நெல்லின் விளை கதிர் கொண்டு . தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி’1 மக்களுக்கு உணவூட்டினார். ஆம்பல்மலரை அவித்து அவியலாக்கி உணவுடன் கூட்டி உண்பித்தார். இவ்வாறு ஆம்பல் அவியலாயிற்று. ஆம்பலொடு குவளையும் இவ்வாறு பயன்படும் போலும். நிலவகைகளில் மருதமும் நெய்தலும் மென்புலம் எனப்படும். குறிஞ்சியும் முல்லையும் வன்புலம் எனப்படும். வன்புலத்து மக்கள் மென்புலத்திற்கு விருந்தாக வந்தால் மென் புலத்தார் படைக்கும் விருந்துகளில் செங்கழுநீர் இடம்பெற்றது. 'கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பு 2 - இதில் விருந்தாகப் படைக்கப்பட்ட பொருள்களாக வாளைமீன், ஆமை இறைச்சி, தேன் ஆகியவை குறிக்கப்படுகின்றன. உணவாகும் இவற்றுடன் குவளை சொல்லப் பட்டுள்ளது. எனவே, ஆம்பல் அவியல் போன்று குவளை மலர் அவியலாக இருக்கலாம். அன்றி உண்டபின் சூட்டியதாகவும் இருக்கலாம். உணவுப் பட்டியலில் உள்ளமையாலும், விருந்து அயரும்(ஊட்டும்) என்றிருப்பதாலும் குவளைக்கறியாகக் கொள்வது பொருந்தும். - . . . • .13 تا 15 : 43 : نه.18 ,1817: فع ها