பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213


மாறோக்கம் என்றொரு ஊர். அங்கு வாழ்ந்த ஒரு மங்கிை தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கினாள். உடல் நிறம் பசலை பாய்ந்திருந்ததால் அவளைப் பசலை என்ற பெயரால் அழைத்தனர். அவளது புலமைச் சிறப்பைக் கொண்டு 'ந' என்னும் அடை கொடுத்து நப்பசலை” என்பர். இளமையில் இவள் வெள்ளாம்பல் தழையுடுத்தி ஒப்பனை செய்து கொண்டவள். கணவனார் இயற்கை எய்திவிட்டார். கழிகல மகள் ஆனாள். வெள்ளாம்பல் உணவாகத் துணை செய்தது. இனிக்கத் தக்க பருவத்திலும் உடலில் ஒன்றி உடன் இருந்தது வெள்ளாம்பல், இரங்கத்தக்க கைம்பெண் நிலையிலும் அல்லியில் தோன்றிய புல்லரிசியாக உடன் இருந்தது. அந்த அம்மையார் அந்த வெள்ளாம்பலே இரங்கத் தக்கது’ என்று பாடினார். "அளிய (இரங்கத்தக்க) தாமே சிறு வெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே; பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து இன்னா வைகல் உண்ணும் அல்லிப் படுஉம் புல்லா யினவே”1 -என மாறோக்கத்து நப்பசலையார் பாடியது அவரது தன்வரலாற்று ஒலமாகலாம். இப்பாட்டு புறப்பாட்டு. ஆகையால், நடந்ததாகவே கொள்ள இடமுண்டு. இளங் குமரியின் உடல் அணைக்கத் தண்ணென்றிருக்கும். அந்த இன்பக் குளிர்ச்சியும், ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே” என ஆம்பல் குளிர்ச்சியாகக் கூறப்பட்டது. ஆம்பல் பொதுமக்கள் மலர் என்று குறிக்கும் அளவு பல் வகை மக்களிடத்தும் அமைந்தது. இதற்குக் காரணம், ஆம்பல் இன மலர்கள் காலமெல்லாம் பூக்கும்; நீரற்ற காலத்தும் கிழங்கு அறாமல் பூக்கும்; எல்லா நிலத்திலும் பூக்கும்; 1 புறம் : 248. 2 குறுந் : 84.