பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
218


'நாவிற்கு அருங்கலம் நமச்சிவாயவே" -என முடிக்க, 'பூவிற்கு அருங்கலம் பொங்கு தாமரை”T -என நா விரித்தார் நாவுக்கரையர். பா எனப்படுவ உன்பாட்டு’ - என மாணிக்கவாசகரைப் போற்ற

பூ எனப்படுவது பொறிவாழ் பூவே'2

-எனச் சான்று சாற்றினார் சிவப்பிரகாசர்.

தமிழில் அகத்தியம்'

- கற்று, :தே அலரில் அம்போருகம்'8 - -எனக் கற்பித்தார் குருபாததாதர். போதினுள் மிக்க பங்கபமாம்”4 ஆம் தாமரைப்பூ, பூ உலகத்தில் தனிமுடி சூடித் திகழ்வது. தனி முடிக்குரிய தகுதி கொண்டது. பூக்களில் பெரியது. இதழ்களிலும் பெரியது. எழில் வாய்ந்தது; நிறைந்து விளங்குவது. இனிய மெல்லிய மணம் கொண்டது. உலக மலர்களில் ஒன்று. மேலை நாட்டிலும் ஏற்றுங்கொண்டது. கீழை நாடுகளிலும் போற்றப்படுவது. ஆழ்ந்து நோக்கினால் மேலை நாடுகளை விடக் கீழை நாடுகளில் அவற்றுள்ளும் இந்திய நாட்டில் அதனுள்ளும் தமிழ்நாட்டில் சிறப்பிடம் பெற்றது. இதற்கு அமைந்த உலகப் பெயர்களே ஆங்காங்கு அது பெற்றுள்ள தகவைக் காட்டுவதாகும். ஐரோப்பிய மொழியில் இதற்கு உலோட்டசு -(10TUS) என்று பெயர். இச்சொல் கிரேக்கச் சொல். இதன் மூலப்பொருள் கொண்டு இம்மலர் அத் துணைத் தகுதியுடையது என்று சொல்ல இயலாது. இப்பெயர் பல வேறு வகைப்பட்ட செடியினங்களின் பொதுப்பெயர். சிறப்பாகத் தாமரையைக் குறிக்கும். 'ஒடிசே என்பது புகழ்பெற்ற கிரேக்கக் காப்பியம். இஃது ஒடிச்சு என்னும் பெரு வீரனது பயண வரலாற்றைக் குறிப்பது. அவனது பயணத்தில் அவனை எதிர்ப்பட்ட மக்கள் தாமரை 1 அப். தே: நமச்சிவாயப் பதிகம்: 2 : குமரேச சதகம்: 24 : 8, 2. 2 நால்வர் நான்மணிமாலை 40 4 கந்த்புராணம்: வ. திருமணம்: 218