பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
219


மேல் வாழ்ந்தனராம். அவர்கள் தாமரைப் பழம் ஒன்ற்ை உணவாகக் கொள்பவர்கள். அதனால், 'லோட்டோபாகி' - (LOTOPHAGl) எனப்பட்டனர். இச்சொல்லுக்குத் தாமரை உண்பிகள் என்று பொருள். இவர்களது உணவாகிய பழம் ஒரு தனித்தன்மை கொண்டது. வீட்டாருடனும், நண்பருடனும் தொடர்பின்றிச் சோம்பலில் செம்மாந்திருக்க விரும்புவோர் இப் பழத்தையோ இதிலிருந்து வடிக்கப்படும் குடி நீரை யோ அருந்துவர். அதன் வழி உருப்பெற்ற உலோட்டசு என்னும் சொல்லுக்குச் சோம்பலில் செம்மாக்க வைப்பது என்னும் பொருள் நேர்ந்தது. இவ்வகையில் பெயர்பெற்ற"மேலைநாட்டுத் தாமரை, நீரில் பூப்பதாகச் மட்டுமன்றி மரத்திலும் செடியிலும் மலர்வதாகவும் அமைந்தது. இம்மலருக்குப் பெருஞ்சிறப்பு உண்டு. என்றாலும், அதன் பெயர்க்காரணம் மதிப்புடையதாக இல்லை. சொல்லில் தாமரை தமிழில் தாமரையைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. பெரும் வழக்காக உள்ள தமிழ்ச்சொற்கள் முளரி, முண்டகம், தாமரை என்பன. இதன் காம்பு தண்டு எனப்படும். தண்டில் மலர்ப் பகுதி தொடங்கும் இடத்திலும் புறஇதழ்களிலும் சொரசொரப்புள்ள சினைப்பு போன்ற சிறு முள் உருவங்கள் உள. அடித்தண்டு (அரை) முள்ளைப் பெற்றதால், "முள் அரைத் தாமரை' எனப்படும். முள்ளை உடையதால் முளரி என்று பெயர். முள்ளி' என்றும் கூறுவர் 'முள்ளி’ என்னும் பெயரில் கழிமுள்ளி' என்னும் வேறொரு பூ உண்டு. ஆகையால், 'முள்ளி' எனும் பெயர் தாமரைக்கே உரியது ஆகாது. அதனால் அடைமொழியாக,

முள் + தாள் + தாமரை "முட்டாட்டாமரை” எனப்பட்டது.

1 சிறுபாண் : 183 : பெரும்பாண் : 114 2 "முட்டாட்டாமரை துஞ்சி' -திருமுருகு 18,