பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
220


முள் என்னும் அடிப்படையிலே முண்டகம்' என்று ஒரு இபயர் உண்டு. தாழையும் முண்டகம் என்று குறிக்கப்படுவதால்? இஃதும் தாமரைக்கே உரிய பெயராக அமையாது. எனவே, தாமரை என்னும் சொல்லே இதற்கு உரிய சொல்; இபயர்; காரணத்தோடு பெற்ற பெயர் வழங்கப்படும் பெயர்இச்சொல்லின் மூலப்பொருள் இப்பூவின் வரலாற்றையும் சிறப்பை யும் ஆம்பலைப் போன்று உணர்த்துகின்றது. இப்பெயருடன் ஒட்டிய சொற்களில் வட்டத்தாமரை' என்பது ஒரு வகை மரம். 'வானத் தாமரை (ஆகாயத் தாமரை) என்பது ஒரு வகை நீர்ப் பூண்டு. வடபுலத்தில் இப்படி ஒரு நிர்ச்செடி உண்டு. இச் செடியைக்கொண்டு அண்மையில் எரிவளி (GAS) விளைவிக்கலாம் எனக் கண்டுள்ளனர். இதன் மலர் பெரும் சிறப்பிற்கு உரியது அன்று. பொதுவில் இது நீர்ப் பூ. தமிழகத்தில் இது நீர்ப் பூவே. தாமரை என்னும் பெயர் தமிழில் நீர்த் தொடர்பில் அமைந்ததாகும். ஆம் என்னும் சொல்லிற்கு நீர்’ என்னும் பொருளை முன்னரும் கண்டோம். இந்த ஆம்' என்னும் சொல் மாந்தரது வாய் வழக்கத்தில் தாம் என்று வளர்ச்சியுறும். ஆள்வினை = முயற்சி; தாள் ஆண்மையும், முயற்சி. ஆள் -தாள் இயைபு உடையவை. ஆழ் நீர் - தாழ் நீர். இவற்றில் ஆழ் - தாழ் ឆាយាំ தெரியும். யாய்-ஆய்-தாய் வளர்ச்சியையும் இவ்வகையில்தொடர்பு படுத்திப் பார்க்கலாம். இம்முறையாக, ஆள் - தாள் ஆழ் - தாழ் 1 'முள்ளுடை மூலம் பெயர் : 68. . 2 “தாமரைப் பெயரும் தாழையும் கள்ளும் சின் குடை முள்ளியும் நெற்றியும் முண்டகம்: யாவும் முண்டகம் என்றே சாற்றும்-சூடா, நி: மரப் -பிங், தி : 8977,