பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
222


இச்சொல் வரலாறு, தாமரை நீரில் தோன்றிய காரணத்தால் பெற்றபெயர் என்பதைச் சொல்லுகின்றது. வட மொழிலும் அப்பு= நீர். இப்பொருள்கொண்டு தாமரைக்கு 'அம்போரு கம்' என்றொருபெயர். இதற்குப் பக்கச் சான்றாக தாமரை மொட்டு வடிவத்தில் கட்டப்படும் தலைமுடி ஒன்று தாமம்' - எனப்படுவதைக் கொள்ளலாம், இத் தாமம் தாம்பு என்று மருவி நீரைக் குறிக்கும், இத் தொடர்பில் தாமரை தாம்பிரை' என வழங்கப்பட்டதுண்டு. இதனை, 'சிவந்தன தாம்பிரைச் செங்கண்'2 -எனக் கம்பர் அமைத்துப் பாடினார். மேலும், நீர்வளம் மிக்க நிலப்பகுதி மருதம் எனப்படும் அன்றோ? மருத நிலத்து ஊர்ப்பெயர்களைப் பட்டியலிடும்? நிகண்டுகள் தாமம் என்னும்பெயரையும் குறிக்கின்றன. மற்றொரு தொடர்பில் ஒன்றை இங்கு காண்பது பொருந்தும். ஆம்பல் தாமரையைக் காட்டிலும் அதிகப் பரப்பில் மிகப்பரவலாக, மிகுந்த எண்ணிக்கையில் பல்குவது. எனவே, நேரடியாகவே 'ஆம்’ என்னும் நீர்ப்பெயர் கொண்டு "ஆம்பல்' என்று ஆகியது. இவ்வாறு "ஆம்" என்னும் வேர்ச்சொல்லின் அடியாக, ஆம்-தாம்-தாமம்-தாமர்-தாமரை மலர்ந்தது. ஒன்றில் நூறு அலர்வதால் மலருக்கு அலரி என்றொரு பெயர் அன்றோ? ஆனால், கணவீரம் என்னும் செவ்வலரிக்கு அலரி என்னும் சொல் வழக்காகிவிட்டது. அலர்வதில் பேரழகைப் பெற்றுள்ள தாமரை, இதழ்களில் மிகு எண்ணிக்கை கொண்டது. ஒருதாமரை மலரை எடுத்துப் புற இதழ்களை நீக்கிவிட்டு அகவிதழ்களை 1 'தாமம் முகுடம் பதுமம் கோடகம் கிம்புரி முடியுறுப்பு ஐந்தெனக் கிளப்பர்'-சேந், தி : செ. வ, பெயர் 2 கம்ப.வருணனை வழிவேண்டு பல்க: 7. : , 3. கடாதி இடப்பெயர்: 40