பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223


எண்ணத் தொடங்கினால் இருபதுக்குக் குறையாத பெரிய இதழ் களை முதற்சுற்று அடுக்குகளில் காணலாம். அடுத்துப் படிப்படி யாகச் சிறிதாகும் இதழ்களை எண்பதிற்கு மேல் காணலாம். எனவே தாமரை நூற்றுக்குக் குறையாத இதழ்களைக்கொண்டது. இதனால், 'நூற்றிதழ் அலரி (புற : 27 : 2) 'நூற்றிதழ்த் தாமரை” (ஐங் : 20)-என இலக்கியங் களில் நூற்றிதழ் அவரி' எனப்பட்டது. தாமரையின் அழகுப் பிறப்பிடம் இதழ்கள்தாம். அதன் வண்ணமும் வடிவமும் மென்மையும் கூடி, கொள்ளை அழகைக் கொட்டுகின்றன. ஒவ்வோரிதழாகப் பார்க்கின்றார் பாவேந்தர் பாரதிதாசனார். 'ஓரிதழ் குழந்தைக் கன்னம்: ஓரிதழ் விழியை ஒக்கும்: ஓரிதழ் தன்ம ணாளன் உருவினைக் கண்டு கண்டு பூரிக்கும் உதடு; மற்றும் ஓரிதழ் பொல்லார் நெஞ்சம் வாரித்தான் தரச்சி வந்த உள்ளங்கை யாம் மற் றொன்று' ! -எனப் பாடிக் களிக்கின்றார். இதழின் நிறங்கொண்டே தாமரை, செந்தாமரை வெண் டாமரை என இருவகைப் பெயரைப் பெற்றது. மிகப் பழங்காலத்தில் செந்தாமரையின் இதழ்கள் அரக்கு போன்று கருஞ்சிவப்பு நிறத் தில் விளங்கின. கருஞ்சிவப்பு இதழ் ஒன்று அரக்கில் தோய்த்த அகங்கை போன்றுள்ளதைச் சிறுபாணாற்றுப்படை, " ... ... ... ... ... ... ... ... தாமரை ஆசில் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன சேயிதழ் 2 என்றது. கலித்தொகை, " . . . ... ... ... ... தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவை போல்’’3 1. அழ, சி : செந்தாமரை : 7 * .. 2 சிறுபாண் 78 8 • .75 سيتي . கலி : 18° 5. 11, 12.