பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224


என்றது. இப் பழந்தமிழ் நூற்கருத்துகளைக் கொண்டு செந் தாமரை என்பது கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததை அறியலாம். "புலி நா அன்ன புல்லிதழ் (மெல்லியஇதழ்கள்) தாமரை” ( என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாட்டால் கருஞ்சிவப்பு சற்று வெளிர் நிறம் ஆகியதைக் காணலாம். காலப்போக்கில் இயற் கையில் நேர்ந்த இனக்கலப்பால் இளஞ்சிவப்பு நிறம் தோன்றியது. தற்காலத்தில் இந்த இளஞ்சிவப்பு இதழ்களையே செந்தாமரை யாகக் காண்கின்றோம். இதன் வெண்மையான இதழ் நல்ல வெண்மை என்பதை முயற்காதிற்கு ஒப்பிட்டு "முள்ளரைத் தாமரைப் புல்விதழ் (மெல்லிய இதழ்) புரையும் நெடுஞ்செவிக் குறுமுயல்' 2 எனப்பட்டது. தமிழகத்தைப் பொருத் த அளவில் செந்தாமரை, வெண்டாமரை, என்னும் இரு வண்ணத் தாமரைகளே உள்ளன. வடபுலத்தில் நீலத்தாமரை உண்டு. அவ்விலக்கியங்களிலும் நீலத்தாமரை குறிக்கப்படுகின்றது. இங்கு நீலத்தாமரை கருங் குவளையைக் குறிக்கும். மெல்லியளாகிய சகுந்தலையை அவளது தந்தையார் தவப்பணியில் ஈடுபடுத்தியது சற்றுக் கடுமையானதாகப் பேசப் படும்போது, 'நீலத் தாமரையின் மெல்லிதழால் வேள்விச் சுள்ளி களைச் சேமிக்க முயல்வதைப் போல இம்மெல்லியலைத் தவப்பணி செய்விக்க (காசியர்) விரும்பியதாகும்' -எனப்பட்டது. இதுகொண்டும் இது போன்ற வண்ணனைகள் கொண்டும் வடபுலத்தில் நீல நிறத் தாமரை நிலப்பூவாக இருந்தமை அறிய முடிகின்றது. மேலை நாட்டிலோ மரங்களிலும் செடிகளிலும் அனைத்து வண்ணங்களிலும் தாமரை உண்டு. தமிழகத்தில் இரு வண்ணங்கள்ே தாமரைக்கு அமைந் துள்ளமையில் ஒரு தனிக்கருத்து இருக்கிறது. 1 தண்டி : 90 மேற்கோள். 2 பெரும்பாண் :14, 115.