பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
226


செந்தா மரை இரவி சேர்உதயம் பார்க்குமே” என்றபடி தாமரையை மலர்த்துபவன் கதிரவனேஎன்பது வழக்கு இதனால் அவனுக்குத் தாமரைக் காதலன்', 'தாமரைக் கணவன் தாமரை நாதன் தாமரை நாயகன்' எனப் பெயர்கள் அமைந்தன. அவன் தனது கதிர்கள் என்னும் கைகளால் தாமரையின் இதழ்க்கதவைத் திறக்கின்றான்' என்றெல்லாம் பாடினர். - காலையில் தாமரையின் இதழாகிய கதவைத் திறந்த கதிரவன் மாலையில் அடைக்கவேண்டாவா? மாணிக்கவாசகர், "பல்கதிரோன் அடைத்த தாமரை இல் லின் இதழ்க் கதவம்' காட்டுகின்றார். . கதிரவனின் இந்தத் திறப்புவிழா, அடைப்பு விழா விளையாட்டு எப்போதும் செல்லாது. பனிப்படலம் முடிக் கொண்டால் நடக்காது. இதனை வைத்துத் தாமரையின் ஒரு தன்மை உணர்த்தப்படுகின்றது. - குமரிப் பெண்ணும், கிணற்று நீரும் ஒருவகையில் இயற்கைக்கு மாறுபட்டவர்கள். கோடை வெப்பத்தில் குளிர்ச்சியை யும், பனிக்காலத்தில் வெதுவெதுப்பான வெப்பத்தையும் வழங்கு பவர்கள். தாமரையையும் இவ்வகையிற் கூறலாம். மோசிக் கொற்றன் என்னும் புலவன் ஒரு காரணங்காட்டி இதனைக் கூறினான்:

  • கதிரவன் தாமரையை மலர்த்தித் தனது வெப்பத்தை அதனுள் பெய்தான். பணி வந்ததால் அவன் மறைக்கப்பட, தாமரை கூம்பியது. கதிரவன் வைத்த வெப்பம் உள்ளே பொதிந்துள்ளது. இந் நிலையில் எடுத்து ஒற்றினால் பனிக்குளிர்க்கு வெது வெதுப்பாக இருக்கும். இதுபோன்றவள் தலைவி" என்பதை,

'பணியே வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி; ஜயென அலங்கு வெயில் பொதிந்த தாமரை உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே -எனப்பாட்டா கினார். இதில் அறிவியல் கருத்தும் உளது. 1 திவெண்பா : 96 2 திருக்கோ : 184 குறு: 876 3-6,