பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
231


"செந்தாமரைமேல் நடந்தான் அடி' என்றனர். சிற்றன்ன. வாயில், அசந்தா ஒவியங்களில் சமணத் துறவிகள் கையில் தாமரை பிடித்துள்ள காட்சிகள் உள்ளன. அம்மதத்துச் சாரணர் களாம் ஐந்திருச் சாரணர் (பஞ்சபரமேட்டிகள்) வந்திறங்கும் கல்மேடைகளில் தாமரை மலர் படைக்கப்படுவதுண்டு. அன்னார் கையில் தாமரை பிடித்து வருவர் என நம்புவர். இவ்வாறு கையில் தாமரைமலரைப் பிடித்துத்தோன்றுவதில் தன்கையில் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்' என்பதுபோல் கடவுளர் யாவரும் ஒருமைப்பாடு உடையவராகக் காட்சி தருகின்றனர். சிறு தெய்வங்களாகிய மணிமேகலா தெய்வம், மதுராபதி முதலியன வும் கையில் தாமரை பிடித்துத் தோன்றினவாம். - இவ்வாறு கையில் மலரைப் பிடித்து மகிழ்வது மாந்தரது வழக்கமாகும். உண்மையில் தாமரையைப் பிடிப்பதை இலக்கியது கள் காட்டுவதுடன், வண்ணனையிலும் காட்டுகின்றன. மகளிர் கைகளில் தத்தம் குழந்தைகளது கையைப் பிடித்துக்கொண்டு செல்வதை, x- r

  • அடைமறை ஆயிதழ் போது போற் கொண்ட 5 -என்றும் "தாதணி தாமரைப் போது பிடித்தாங்குத் . . . - தாமும் அவரும் ஒராங்கு விளங்க'4 என்றும் காட்டு கின்றன. இன்றும் இலங்கையில் புத்தர் சின்னங்காணச் செல்வோர் கையில் தாமரை கொண்டு செல்கின்றனர். மாந்தர் தாமரையாத கண்ணி சூட்டிக்கொண்டனர். தார் அணிந்தனர். பலவகை களிலும் பயன்கொண்டனர். ஆயினும், புராணங்கள் தாமரை கடவுளர்க்குரியது என்றே ஆக்கின. . .

"கடவுள் ஒண் பூ', 'தெய்வத்தாமரை', 'புவ்வத்தாமரை, "புகழ்தரல் தாமரை”. எனப்பட்டது. கடவுளர் இடம்பெற்ற கோவில்களைத் தாமரையாகக் கண்டனர். மதுரைக் கடவுள் இருப்பிடம், - சிவ. சி: 2564, அப். தே கழிப்பாலை : 3 : 1 சிவ. சி ; 2756 மது, கா : 462, 468.