பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235


தாமரை அருகிவரும் நிலை, தாமரையால் கொள்ளப்பட்ட பல கலைகளும் அறவே நினைவற்றுப் போயிருப்பதையும் காட்டு கின்றது எனலாம். 5615 5T060) போர்த் தாமரை. தாமரை மலரின் அமைப்பு நடுவில் ஒரு மேடையையும் சூழ்ந்து படிப்படி வளர்ச்சியுள்ள அக இதழ்களையும் பாதுகாப்பான புற இதழ்களையும் கொண்டுள்ளதை அறிவோம். இஃது ஒரு நகர அமைப்பிற்கு வடிவமைப்பாகக் கொள்ளப்பட்டது. கல்விக் கண் வளர்த்த காமராசப் பெருந்தகை முதலமைச் சராக இருந்தக்கால் ஒரு செய்தி கூறினர். நகரமைப்புக் கலையைக் கண்டுவரத் தமிழ்நாட்டு அலுவலர் குழு ஒன்று அமெரிக்க நாட்டிற்குச் செல்வதாக இருந்ததாம். இக்கருத்து முதலமைச்சர் காமராசர் முன் படைக்கப்பட்ட போது அப்பெருந்தகை, 'அமெரிக்காவைப் பார்ப்பது அப்புறம் இருக்கட்டும்; போய் மதுரை நகரைப் பார்த்து வருக” என்றாராம். நாம் பாடலில் மதுரையைப் பார்ப்போம். பாடல் பரி பாடல். பழைய கதைத்தொடர்புடன்தான். தொடங்குகின்றது: கொப்பூழ்த் தாமரை : மதுரை ஊர்; பூவின் அக இதழ்வரிசை : தெருக்கள்; நடுப் பொகுட்டு : கோவில்; பூந் தாதுக்கள் : மக்கள்; தாதுஉண்ணும்வண்டுகள் : பரிசுபெற்று வாழ்பவர். இவற்றைப் பாடல் வடிவத்தில் பார்க்கலாம்:

01ധേ18 கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீர் ஊர்; பூவின்

இதழாகத் தன்ன தெருவம்; இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோவில்;