பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
236


“தாதின் அனையர். தண்டமிழ்க் குடிகள்; தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்’1 மதுரை நகரமைப்பு, தாமரை மலரமைப்பாக உள்ளது. கொங்கு வேளிர், மகதநாட்டு நகர் இராயகிரியத்தைத் தாமரை அமைப்பாக வண்ணித்துள்ளார். நகரைச் சுற்றியுள்ள படைச்சேரி-பொய்கை, பரத்தையர்சேரி-புறப்புறவிதழ்; வேளாளர் தெரு-புறவிதழ்; வணிகர் தெரு-புல்லிதழ் உட்புறம், அந்தணர் தெரு. அகவிதழ் அமைச்சர் தெரு - அல்வி; அரண்மனைபொகுட்டு; இவ்வாறு, கோயில் கொட்டை யாகத் தாமரைப் பூவொடு பொலியும் பொலிவிற்று'2 -என்றார் திருவாரூர் ஒரு காலத்தில் இவ்வம்ைப்பில் இருந்ததாம். அதனால், அதற்குத் தாமரையூர் என்னும் பொருளில் 'கமலை’ என்றொரு பெயர் வழங்கிற்று. அதனையும் சேக்கிழார், : மலர்மகட்கு வண் தாமரைபோல் மலர்ந்து அலகில் சீர் திரு வாருர் விளங்குமால்' என்று பாடினார். இன்றும் தமிழகத்தில் தாமரைப் பெயரில் தாமரைக் காடு' தாமரைப்பாடி செந்தாமரைக்கண்'முள்ளியூர்'முண்டகத்துறை: எனப் பலபெயர்களில் ஊர்கள் உள்ளன. - ஊருக்கு மட்டுமன்று; திக்குகளின் பெயர்களுக்கும் தாமரைப் பெயர் அமைந்தது. திக்குகள் எட்டு. எட்டுத் திக்கையும் எட்டு மா யானைகள் காப்பதாகக் கதை. தென்கிழக்குத் திக்கைக் காக்கும் யானையின் பெயர் புண்டரீகம் என்னும் வெண்டாமரைப் பெயர். அல் யானையே பேசுகின்றது: 'புண்டர் கப்பேர் உள்ளேன்; வையகம் போற்றும் சிரேன் மாதிரம் (திக்கு) காவல் கொண்டேன்' 4 இவ்வாறு கச்சியப்பர் பேச வைத்துள்ளார். - ஊர்களை அமைக்கத் தாமரை அமைப்பு கொள்ளப்பட்டது போன்று போர்களை அமைக்கவும் தாமரை கொள்ளப்பட்டது. போர்க்களத்தில் பலவகை அமைப்பில் படைகளை அணி அணி யாக்குவர். அவற்றுள் ஒன்று ‘தாமரை அணி எனப்படும். வட மொழியில் பதும வியூகம் என்றனர்.

8 பெரிய பு: திருகச்சப்பு: 1. 2 சிவ. சி:19, 4 தித். பு: க்கும்ன்ேபன் வல்க:12