பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
237


கட்டியங்காரன் சீவகனை எதிர்த்துப் போர்ப்படையை இவ்வாறு தாமரை அணியாக வகுத்தான். எவ்வாறு? தாமரையின் புறத்தே உள்ள புற இதழ்போல, புறத்தே சுற்றி வாட்படை நிறுத்தப்பட்டது; அகவிதழில் பெரியவைபோல, களிற்றுப்படை சூழ நிறுத்தப் பட்டது; - அகவிதழில் உட்சுற்றுச் சிறியதைபோலத் துணை அரசர் நின்றனர்; நடுப் பொகுட்டைப் போலக் கட்டியங்காரன் மக்கள் நின்றனர்; பொகுட்டிற்குள் கொட்டை போலக் கட்டியங்காரன் நின்றான். - - இவ்வாறு போர்க்களம் தாமரைப் பொய்கையாயிற்று. பொய்கை போர்க்களம்: புறவிதழ் - புலவு வாட்படை, புல்லிதழ் ஐயகொல் களிறு: அகவிதழ் அரசர்; அல்லிதன் மக்களா ைமயில் கொட்டையம் மன்னனாம் மலர்ந்த தாமரை வரிசை' யாக அமையச் சீவகன் வண்டு போன்று கொட்டைமேல் பறந்து தாக்கினான். சீவக சிந்தாமணி காட்டும் தாமரை அணி அமைப்பு இது. தாமரை என்னும் சொல்லை ஒரு பேரெண்ணிக்கைக்குக் கொண்டமை கண்டோம். இலக்கியங்களும்,

  • தாமரை பயந்த ஊழி' என பல ஊழிகளைக் குறிக்கத் தாமரையைக் குறிக்கின்றன. -

பெரிய எண்ணிக்கைக்குத் தாமரை கொள்ளப்பட்டது போன்று மிகச் சிறியபொழுதிற்கும் தாமரை கொள்ளப்பட்டது ஒரு வியப்பான செய்தியாகும். கணம்' என்பது, இமைக்கும் நேரத்தினும் பல ஆயிரத்தினும் ஒரு பங்கு என்பர். அந்த நேர அணுவை அரபத்த நாவலர் என்னும் பரத நூல் புலவர் அள விட்டுக் காட்டியுள்ளார். தாமரை இதழ்களில் நூறு இதழ்களை அடுக்க வேண்டும்: 1 சீவ, சி : 2811 - 2 திருமுகத : 164 -