பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திணை மலர்கள்


அகத்திணை மலர்கள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

பூவால் திணை

அகத்திணைக்கும் புறத்திணைக்கும் குறியீடுக ளா கப் பூக்களின் பெயர்கள் அமைக்கப்பட்டமை முன்னே குறிக்கப்பட்டது. தினைப்பெயர்களின் குறியீடு பூப் பெயர்களால்தாம் அமைந்ததா? இதனை முடிவுகட்ட இரு திணைகளையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். - - - அகத்தினை ஏழு வகைப்படும். திணை என்றால் ஒழுக்கம். இவ்விரண்டு ஒழுக்கங்களில் முந்தியது அக ஒழுக்கம். அக ஒழுக்கம் ஏழில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்தும் ஒரு தொகுப்பு எனலாம். இஃது அன்புத் தொகுப்பு. அஃதாவது ஒத்த அன்புடைய ஆண், பெண் இருவரது காதல் நடப்பு. இதனால், இத்தொகுப்பை 'அன்பின் ஐந்திணை என்றனர். மற்றைய இரண்டாகிய கைக்கிளையும் பெருந்திணையும் இணைந்த அன்பு அற்றவை. - -