பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
240


அன்பாம் காதல் உணர்வு மென்மைத் தன்மையது. 'மலரினும் மெல்லிது காமம்’ அன்றோ? மென்மை வாய்ந்த அன்புத் திணைகளுக்கு மென்மை வாய்ந்த மலர்களையேகுறியீடாக் கிய பாங்கு ஒர் அருமைப் பாங்காகும். ஏனைய இரண்டும் மலர்ப் பெயரைப் பெறவில்லை. பெற முடியாதவை; பெறக் கூடாதவை, இவ்வாறு பெற்ற பெயர்க் குறியீடும் காரணத்தால் அமைந்ததே. 'முல்லை, குறிஞ்சி என்பன இடுகுறியோ: காரணக்குறியோ?” -என்றொரு வினாவை இளம்பூரணர் என்பார் எழுப்பிக் கொண்டார். இவர் தொல்காப்பியத்திற்கு முதன் முதல் உரை யெழுதியவர். இவரே விடை கூறினார்: 'ஏகதேச காரணம்பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி என்று கொள்ளப்படும்'1 -என்றார். என்ன காரணமோ? அவரே இதற்கும் வினா எழுப்பி விடை தந்தார்: "'என்னை காரணம்? - எனின், காடுறை உலகிற்கு முல்லைப் பூ சிறந்தது ஆகலானும், மைவரை உலகிற்குக் குறிஞ்சிப் பூ சிறந்தது ஆகலர்னும், தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும், பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையானும் இந்நிலங் களை இவ்வாறு குறியிட்டார்' - எனப் பூக்களின் சிறப்பால் நிலங்கள் பெயர் பெற்ற காரணத்தை விளக்கினார், பாலை என்பது தனி நிலம் அன்று. எனினும் அதிலும் பாலைப் பூ உண்டு. அப் பூ சூடிக்கொள்ளும் பூ அன்று. ஆகலான், பாலை மரத்தைக் குறியீடாகக் காட்டினார். - அகத்திணைகளை வைத்துத்தாம் புற த் தி ைண கள் அறிமுகம் செய்யப்படும். வெட்சிதானே குறிஞ்சியது புறனே' (தொல்: பொருள்: 8.9) என்பது போன்று இன்ன அகத்திற்கு இன்ன புறம் என அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடர்பாலும் புறந்திணைகளும் பூக்களால் காரணக் குறி பெற்றவை. இதனை யும் இளம்பூரணர், r 1 தொல், பொருள் உரை