பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
241


'அந்நிலத்திற்குரிய பூ ஆகலானும் அதற்கு (குறிஞ்சிக்கு) அது (வெட்சி) புறமாம்' -என்று நிலப் பூவோடு பொருத்திக் காட்டினார். ஆனால், இவருக்குப் பின்னர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் என்பவர் இவ்வாறு பூவால் பெயர் பெற்றன என்பதை ஏற்கக் கருதவில்லை. அவரது மாறு பட்ட கருத்தை, 'முல்லை முதலிய பூவாற் பெற்றன. இவ்வொழுக் கங்கள் எனின், அவ்வந் நிலங்கட்கு ஏனையப் பூக்களும் உரியவாதலின், அவற்றால் பெயர் பெறலும் உரிய (ஆகுமே?) எனக் கடாயினார்க்கு விடை இன்மை உணர்க' -என்று விளக்கினார். விடை இல்லாது போகவில்லை. ஒவ்வொரு நிலத்திலும் பலப் பல பூக்கள் இருப்பினும் அவற்றுள் சிறந்த ஒன்றைக் கொண்டே பெயர் இடப்பட்டதாக இளம்பூரணர் தந்திருக்கும் விளக்கப்பகுதியிலேயே விடை இருக்கின்றது. பல இருப்பினும் பெயர் சூட்டும்போது ஏதாவது ஒன்றைக்கொண்டுதானே பெயர் சூட்ட வேண்டும். சி ற ந் த ஒன்றைக்கொண்டு பெயர் சூட்டப்பட்டது. இங்கு, பூவினால் பெயர் பெறவில்லை என்ற நச்சினார்க் கினியர் பின்னே மாறுபட்ட சொற்களை அமைத்துள்ளமை வியப்பாக உள்ளது. புறத்தினைப் பூக்களோ அவற்றிற்குரிய போர் நிகழ்ச்சியின் போது தவறாது சூடிக்கொள்ளப்படும். இவ்வாறு சூடப்படுவதை யும் தச்சினார்க்கினியர் பூக்களுக்குத் தாம் தரும் ஒரு வாய்ப்பு போன்று, - “இதற்கு அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க' -என எழுதினார். இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் எழுதிக் காட்டி வரும் இவர், தும்பைத் திணைக்கு வந்ததும், . . . . 'தும்பை என்பது சூடும் பூவினால் பெற்ற பெயர்"(தொல்: பொருள்: 6: உரை) எனப் பூவின் பெயரைத் திணை பெற்றதாக எழுதியுள்ளார். பூவின்மேல் நச்சினார்க்கினியர்க்கு வெறு ப் பு ஒன்றும் இல்லை. தும்பைப் பூவின்மேல் மட்டும் தனிக்காதல் அவருக்கு இருக்கும் என்று கொள்வதற்கில்லை. பூவைவிடத் 亲16