பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242


திணைக்குச் சிறப்பு உண்டு என்னும் கருத்தை வலியுறுத்தவே இவ்வாறு எழுதியிருக்கலாம். எவ்வாறாயினும் இது மாறுபாடே. ஆனால், இயற்கைப் பாங்கிலும் நடப்பிலும் உண்மையிலும் பூவே பெயர்க் குறியீடு ஆயிற்று என்னும் இளம்பூரணர் கருத்தே தெளிவானது ஆகும், அகத்திணை மலர்கள் ஐந்தில் முல்லைப் பூவும், நெய்தற் பூவும், வாழ்வியல் மலர்ப் பகுதியில் விளக்கம் பெற்றன. மற்ற வற்றுள் முந்த வருவது குறிஞ்சிப் பூ. ls)6O)6]) [06UIT. குறிஞ்சிப் பூ தனித் தன்மை நிலத் தோற்றத்தில் மலை முந்தியது. மலர்த் தோற்றத் தால் மலை குறிஞ்சிப் பூவின் பெயரைப் பெற்றது. மலையில் பலவகை மலர்கள் மலிந்திருக்கக் குறிஞ்சிப் பூ மலைநிலத்திற்குக் குறியீடானதற்குக் குறிப்பிடத்தக்க காரணம் உண்டு. அதன் தனித்தன்மையே காரணம். எவ்வாறு அத்தன்மை பெற்றது? குறிஞ்சிப் பூ மலையில் மட்டுமே விளையும். பிறமலர்கள் ஆண்டுதோறும் ஒவ்வொரு பருவத்தில் மலர்வனவாக இருப்ப, குறிஞ்சிப்பூ மட்டும் ஆண்டுதோறும் மலராமல் பல ஆண்டுகள் இடையிட்டுப் பூக்கும்.