பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243


பூக்கத் தொடங்கித் தொடர்ந்தும் பூக்கும். வெள்ளக் காடாகப் பூக்கும். ஐந்து வண்ணங்களில் பூக்கும். இத்தன்மைகள் ஏனையவற்றிற்கு அமையாதவை. எனவே குறிஞ்சி, தனித்தன்மை கொண்டதாயிற்று. இது மலையில் மட்டுமே பூப்பதற்குக் காரணம் உண்டு. இச்செடிக்கு வேண்டப்படும் தட்ப வெப்பமே காரணம். இது 6000 அடி உயரத்திற்கு மேல் உள்ள தட்ப வெப்பச் சூழலில் தான் விளையும். இதனால், இது மலைப் பூவே ஆயிற்று. நம் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், அவற்றிலும் குறிப்பாக நீலகிரி மலையிலும், ஈழத்திலும், மத்தியப் பிரதேச மலைப்பகுதிகளிலுமே இது விளையும். உலகில் இதன் இனத்தைச்சேர்ந்தவற்றைக்கான இயலும். இம்மலர் அங்கெல்லாம் விளைவதில்லை. எனவே, குறிஞ்சிமலர் தமிழ்நாட்டுமலர் எனலாம். சோட்டா நாகபுரியில் வாழும் பழங்குடியினராகிய பைகர் என்னும் மலையின்த்தார் இக்குறிஞ்சியைச் சூடி ஆடுவர். இவரது வாழ் வியல் முறைகள் தென் தமிழகத்தில் வாழும் தோதவர்' என்னு ம் மலைவாழ் மக்கள் வாழ்க்கையுடன் ஒத்தது. இவ்வகையைப் பொருத்திப் பார்த்தால் குறிஞ்சி இந்நாட்டுக்குரியது என்பதை உணரலாம். குறிஞ்சி என்னும் சொல்லும் இதற்குத் துணை நிற்கின்றது. குறிஞ்சி தமிழ்ச் சொல். மலைநாட்டு ஊரைக் குறிக்கும் குறிச்சி தமிழ்ச்சொல். குன்று தமிழ்ச்சொல். குன்று மக்களாம் குறவர் தமிழ்ச்சொல். குறவர் சொல்லும் குறி தமிழ். இச்சொற்கள் யாவற்றிற்கும் வேர்ச்சொல் குல்' என்பது. இவ்வேர் தமிழ் மூலம். இதில் தழைத்த குறிஞ்சிப் பூ தமிழ்ப் பூ. தமிழர் தம் திருமணம் காதல் மணம், காதல் மணம் 'குறிஞ்சி மணம்' எனப்பட்டது. ஏழு அல்லது ஒன்பது ஆண்டுகள் பூக்காமலேயிருந்து பின்னர் பூக்கத் தொடங்கும். வெள்ளக் காடாய்ப் பூப்பதும் ஒரு சிறப்பு. மேலை நாட்டு யுக்கா’ என்னும் செடி இதுபோன்று 10 ஆண்டுகள் கடந்தும் பூக்கும். ஆனால், அது மழையில்லாடிை 1, குறி, பா. இறுதி வெண்பா : 2 : 4