பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


33. கலங்கல் நீரைத் தேற்றித் தெளிவாக்கத் தேற்றாங் கொட்டை பயன்படுகிறது.

34. நிறுத்தல் அளவைப் பெயர்களுள் பொன்னை நிறுக்கும் அளவை ஒன்று மஞ்சாடி என்பதாம். இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றிமணி எடை கொண்டது.

35. வெள்ளிலோத்திர மலர்ச் சருகை அரைத்துச் சாந்தாக மகளிர் பூசிக் கொள்வர்.

36. கண்ணிப் பூ குன்றிமணியைத் தரும் கொடியின் பூ. குன்றிமணி பொன்னை நிறுக்கப் பயன்படும்.

37. செவ்வந்தி தமிழ் நாட்டில் வந்திறங்கிய இனத்தில் ஒன்று. சப்பானிய மன்னர்க்கு இஃது அடையாளப் பூ.

அறிய இயலாப் பூக்கள்

பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர்; ஆல மலர்; பலா மலர்.

மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: கள்ளி மலர், பாங்கர் மலர். மலரின் பெயரைத் தவிர வேறு விளக்கம் அறிய இயலா அரிய மலராக இருப்பன: காவிதி மலர், அனிச்ச மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்தும் ஆவை புறத்தே காட்சிப் படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மல்ர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி,பலா.

எளிய பூக்கள்

பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இவ்வாறாத அனைத்துப் பூக்களையும் வகைப்படுத்தி அழகு படத் தொகுத்துக் கூறுகிறது இந்நூல். .