பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244


காரணமாக அவ்வாறு பூப்பது. குறிஞ்சி அவ்வாறு அன்று. இதன் இயல்பே இது எனவே, உலகில் ஒரு தனிச்சிறப்புடையது ஆகின்றது. இதன் செடி குச்சியாக-கோலாகத் தனித்தனியே வளரும், புதராக வளரும். இதனால் இது நிலப் பூ. இக்கோல் கருப்பு நிறம் கொண் டது. இப்பூ நொய்தானது. அதாவது வன்மை யில்லாத மென்மையானது. அளவில் சற்றுப் பெரியது. நீண்ட புனல் வடிவுடையது. கதிர்களாகக் கொத்து நிலையில் மலரும்: பூக்கும் காலம் ஒய்ந்ததும் கீழ்க் கணு உள்ள வரை நிற்க, மற்றவை கருகிக் கொட்டிவிடும். தொடர்ந்து பூப்பதாயினும் இதன் கார்கால மலர் விரும்பிப் பறித்துச் சூடப்படும். இதனைக் கார் மலர் குறிஞ்சி' என்னும் மதுரைக் காஞ்சியால் அறிய முடிகின்றது. ஐந்து வண்ணம் மலையில் பூக்கும்; பெருகித் தழைத்து வெள்ளமாகப் பூக்கும்; தடித்த பெரிய கோலில் பூக்கும்; விடியலில் பூக்கும்; மகளிரது உடல் நிறம் போலவும் பூக்கும், -இத்துணை செய்திகளையும் கண்டுணர்ந்த பாண்டிய மன்னன் ஒருவன் மாறன் வழுதி என்பான், 'நீள்மலை கலித்த பெருங்கோல் குறிஞ்சி - நாள்மலர் புரையும் மேனி' என இரண்டு அடிகளில் வடித்துக் காட்டினான். - இது நொய்தாக-வலிமையற்ற மெல்லிய பூ. வெண்மை நிறத்தில் பூக்கும்' -என்பதை வெறிபாடிய காடிக்கணியார் என்னும் அம்மையார், - 1. மது. கா : 618 2 நம்:801:1, 2.