பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246


மலைத் தெய்வமாகிய முருகன் குறிஞ்சிக் கோமான். குறிஞ்சி சூடி விளங்குவான்- சூட்டி வணங்குவர். முருக வெறி யேறிய வேலன் குறிஞ்சி சூடி ஆடுவான். முருகன் காந்தள் பூவுடன் இதனையும் சூடி, "நறைக்காந்தள் குறிஞ்சி மலரோடு அணிந்த நறுங் குஞ்சிப் பெருமான்' ஆனான். தெய்வங்கள் இணங்குதல் மட்டுமன்று; விலங்குகளும் இணங்கி மயங்கும். எதற்கு? - பாட்டில் குறிஞ்சி குன்றத்துக் குமரி ஒருத்தி. இவள் கொடிச்சி எனப்படு வாள். திணைப்புனம் காக்க வந்தாள். சுனையில் நீராடினாள். கூந்தலைக் கோதிக்கொண்டே குயிற் குரலைத் திறந்தாள். இனிய இசை பிறந்தது. இவளை அறியாமல் ஒர் ஆண் யானை தினையை மேய வந்தது. வாயில் தினை படுவதற்கு முன் காதில் இசை புகுந்தது. காதுவழி உள்ளத்தைக் கவ்விக் கொண்டது. தினையை மறந்தது யானை. நின்ற நிலை யிலிருந்து பெயர முடியவில்லை அதனால். அதன் பசிய கண்கள் திரங்கின. துர்க்க மயக்கத்தில் ஆழ்ந்தது. அப்படி என்ன இசை யில் பாடினாள்? "கொடிச்சி, பெருவரை மருங்கில் குறிஞ்சி பாட'2 க் களிறும் மயங் கிற்று. ஆம், குறிஞ்சிப்பண் என்றொரு பண் உண்டு. குறிஞ்சிப் பறை, குறிஞ்சி யாழ் உள்ளன. பெண்கள் கூடி நின்று அகவியும் இப்பண்ணைப் பாடுவர். மலையில் எதிரொலித்து வருமாறு இப்பண்ணைப் பாடுவர். இது அடுக்கம் பாடல் எனப்பட்டது. இரவில் காவல் புரிவோர் தாம் காவலுக்கிருப்பதை அறிவிக் கவும், தூக்கத்திற்கு ஆட்படாதிருக்கவும் குறிஞ்சிப் பண்ணைப் 1 முத். பி , த : 6. - 2 அகம் : 102, 5, 6,