பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
247


பாடுவர். அமைதி சூழ்ந்த இரவில் இவ்விசை கேட்போருக்கு அச்சத்தைத் தருமாம்.' கண்ணகியாரைப் போற்றிய குன்றத்துக் குறவர், நறும் புகை புகைத்து குறிஞ்சிப் பாணியைப் பாடினர். இதுபோன்று மலையில் "நறும்புகை எடுத்துக் குறிஞ்சிபாடி' யதை நக்கீரரும் குறித்துள்ளார். குறிஞ்சி எனப்பெயர் பெற்றதெல்லாம் குறிஞ்சி மலராலே யாகும். குறிஞ்சிப் பூ கொய்யப்படுவதால் கொய்யும் குறிஞ்சி’ என்றால் பூவைக்குறிக்கும். பண் என்னும் இசை கொய்யப்படாது இசைக்கப்படுவதால் இதனை, 'கொய்யாக் றிஞ்சி பல பாடி' - என்றனர். * A ற இ! கொண்டும் பூதான் பெயர்களுக்குக் காரணமாயிற்றென உணரலாம். குறிஞ்சியினால் பெயர்பெற்ற ஊர்கள் உள்ளன. குறிஞ்சிப் பூவில் மனம்பற்றிய மருத நிலத்தவரும் தம் ஊர்ப் பெயராம் பாடிக்கு அடைமொழியாகக் குறிஞ்சியை இணைத்துக் குறிஞ்சிப் பாடி’ எனப் பெயரிட்டனர். நீலக்குறிஞ்சியால் உண்டானபெயர் நீலகிரி. இது புணர்ச்சிப் பொருள் கொண்ட பூ. கூடிப் புணர்வோர் புணரும் இடத்தில் மற்றவர்க்கு இடம் தருவரா என்ன? அது போன்றே இச்செடி பூக்கும் போது வேறெந்தச் செடிவகையும் இவ்விடத்தே முளை காட்டவும் முடியாது. ஒன்றும் முளைப் பதில்லை. - . " இவையெல்லாம் பெற்ற குறிஞ்சி குறிஞ்சிப் பாட்டு எனத் தன் பெயரால் தனியொரு இலக்கியமும் பெற்றது. பூக்களின் மேடையாக விளங்கும் குறிஞ்சிப் பாட்டின் குறிஞ்சி மேடையில் தான் பலவகைப் பூக்களும் மலர் மாநாடாகக் கூட்டப்பட்டன. அடுத்த முல்லை, வாழ்வியல் பூவாக விரிந்ததை இங்கும் நினைவிற் கொள்ளலாம். 1 'உருகெழு மரபிற் குறிஞ்சி பாடி கடியுடை வியன் நகர் காவலர் துஞ்சார்' நற் : 255 : 2, 3, 2 புற. வெ. மா ; 79 • . - * 8 திருமுகுகு : 289.