பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
249


சந்தன பூ இம்மலரின் அகவிதழ் நிறம் சிற்றளவில் செம்மஞ்சள் நிறம்கொண்டது. அதாவது சந்தன நிறம் போன்றது. "மகளிர் மணம்மிக்க சந்தனக் கட்டையைத் தேய்த்துப் பொலிவான சந்தனக் குழம்பாக்கித் தம் மார்பிடங்களில் பூசிக்கொள்வர். இவ்வாறு பூசியதற்குத் தேன் கமழ்கின்ற மருதமலர்க் கொத்தை உவமை யாக்கினார் நக்கீரர். அழகிய சந்தன நிறமுடைய இந்த மெல்லிய பூவை மகளிரும் ஆடவரும் சூடிக்கொள்வர். வேறு பல மலர்களுடன் கலந்து தலையில் வைத்து முடித்துக்கொள்வர். இம்மலர்ச் சிறப்பில் மகிழ்ந்த ஆங்கிலர் இதனை மலர் அரசி' என்னும் பொருளில் 'The Quee Flower என்றனர். மேலும், இதனை "Pride of India என்று இந்தியாவின் பெருமைக்கு உரித்தாக்கினர். அகத்திணை மலர்களின் பெயரால் இசைத்துறையில் சொற்கள் உருவானமைக்கு ஏற்ப இம்மருதப் பூ வாலும் இசைத்துறை, பெயர்களை அமைத்துக்கொண்டது. மருதயாழ், மருதப்பண், மருதப்பாணி அமைந்தன. மருதப்பண் காலையில் பாடுதற்கு உரியது. இம்மருதத்தால் துறைகள் பெயர் பெற்றன. மருதூர், இடை மருதுர், மருதவேலி, மருதம்பாக்கம் என ஊர்கள் பெயர் பெற்றன. மதுரை என்னும் பெயரே மருதத்தின் மரூஉவாகவும் இருக்கலாம். இசையில் அகநிலை மருது, புறநிலைமருது, அருகியல் மருது, பெருகியல் மருது எனும் வகைப் பெயர்கள் அமைந்தன. இம் மருதை வடமொழியார் அருச்சுனம்' என்றனர்: நிகண்டிலும் "அருச்சுனம் மருதே' எனப்பட்டது. இது தவறான குறிப்பு. அருச்சுனம் என்பதன் பூ பச்சிலைப்பூ. மருதம் அருச்சுனம் அன்று என்பதைத் திரு பி. எல். சாமி அவர்கள் நிறுவியுள்ளார்கள். (சங்க இலக்கியத்தில் செடி கொடிகள்: பக்கம்: 5.0) ஊடல் பொருளுக்குரிய இப்பூ அதிகமாக மாந்தரிடைப் பழகாமல் ஊடலாகவே அமைந்துள்ளது. அடுத்த நெய்தல், ஆம்பல்குடும்பத்தில் அறிமுகம் பெற்றது. o "நறுங் குறடு உரிஞ்சிய பூக்கேழ் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்ப'-திருமுருகு 88, 84. -