பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
253


'திரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை அரைவரை மேகலை' -என மலைக்குத் தழையை உடை யாகக் குறிக்கின்றது. இது மகளிர் உடுத்தியதன் நினைவில் எழுந்த தாகலாம். இதிலும் வரிசையாக ஏழு அடுக்கிய இலை கூறப் பட்டுள்ளதும் ஏழ் இலைப்பாலையே குறியீடானமைக்குத் துணைக் கருத்தாகின்றது. அகத்திணைப் பூக்கள் இவ்வாறெல்லாம் தமிழர்தம் வாழ்வில் நீங்காப் பங்கு கொண்டன. இவ்வைந்து பூக்களையும் ஐந்து திணைகளுக்கும் தேர்ந்தெடுத்து அமைத்த தமிழ்ச் சான்றோர்த்ம் திறமும் நுண்ணறிவும் எண்ணி மகிழ்தற்குரியன. அமைப்புப் பொருத்தம் தமிழ்ச்சான்றோர் நுணுக்கமாகக் கூர்ந்துநோக்கிப்பொருத்த மான காரணங்கொண்டே இத்தேர்வைச் செய்துள்ளனர். குறிஞ்சி முதலிய ஐந்து திணைகளுக்குரிய நிலங்களில் நான்கே இயற்கை நிலங்கள். பாலை நிலம் , திரிபு என்று கண்டோம். இயற்கை நிலம் நான்கிற்கும் அமைக்கப்பட்ட பூக்கள் நான்கின் நிறத்தையும் பொருத்திப் பார்க்கின் நல்லமைப்பு அதில் மிளிர்வதைக் காணலாம். நிலங்களின் தோற்ற வரலாற்றில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்- என்பது படிப்படியான வளர்ச்சி. பூவினது வண்ணத்துத் தோற்ற வரலாற்றில் முதன்மை யாகவும் அடுத்தடுத்தும் அமைந்த அமைப்பு, செம்மை, வெண்மை மஞ்சள், நீலம் -என்பதைத் தற்காலச் செடியியல் அறிஞரும் கண்டுள்ளனர். முற்காலத் தமிழ்ச் சான்றோர் இவ்வரலாற்றில் மனம்பற்றியிருந்தமையை இங்கு நாம் உணரலாம். இவ்வண்ண ஆய்வின் முடிவைக் கொண்டே நான்கு நிலத்திற்கும் நான்கு வண்ணங்களை முறையே படிப்படியாக்கி அதனதனுக்கு ஏற்ற வண்ண மலர்களைத் தேர்ந்து அமைத்துள்ளனர். இதன்படி, 1. பரி : 21 : 14, 13,