பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்கள் பற்றிய உவமைகள்

பூக்களின் தன்மைகள் பற்றிக் கூறும் ஆசிரியர் அப் பூக்களோடு தொடர்பு கொண்டுள்ள உவமைகளையும் அழகிய முறையில் ஆங்காங்கே தந்து செல்கிறார். மகளிரின் பல்லுக்கு முல்லையும், கண்ணுக்குக் குவளையும், முகத்திற்குத் தாமரையும், வாய்க்கு ஆம்பலும், மூக்குக்கு எட்பூவும், காதுக்கு வள்ளைக் கொடியும், செவ்வரி படர்ந்த கண்ணுக்கு செங்கழுநீர் இதழும் முகிழ்த்த மார்புக்குக் கோங்கமும், தேமல் படர்ந்திருப்பதற்கு வேங்கைப் பூவும் கைக்குக் காந்தளும், செவ் விதழுக்கும் சீரடிக்கும் இலவம் இதழும், பசலைக்குப் பீர்க்கும், நிறத்திற்கு அசோகின் தளிரும் உவமைகளாகின்றன. மற்றும் பூக்கள் எவ்வெவற்றிற்கு உவமையாகின்றன என்பது இலக்கியச் சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது. தாமரை மொட்டு - நெஞ்சக்குலை நொச்சி அரும்பு - நண்டின் கண் வேப்பம் பூ -- வயல் ந்ண்டின் கண் வாகைப் பூ - மயிற்குடுமி குரவின் அரும்பு - பாம்பின் பல் புன்னை அரும்பு - பல்லி முட்டை தாழை மலர் - நாரை தாழை விரிவு - அன்னம் தளவ மலர் - மீன் கொத்தியின் வாய் தளவம் அரும்பு - கவுதாரியின் கால் நகம் * இலுப்பைப் பூ - அம்புக் குப்பி, முத்து, ஆலங் - கட்டி, பூனையின் அடி,

  • கடைந்த மருப்பு, - இரால் மீன் தலை.

ஞாழல் - வெண்சிறு கடுகு, ஆரல் மின் - முட்டை மகிழம் பூ - தேர் உருளை இடப்பம் பூ - குறும்பூம்ப் பறவைக் குஞ்சு பாதிரி - ஒவிய எழுது கோல்