பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257


ஒருவகையில் தனித்தன்மை கொண்டவை, பெருக்கமாக மலர்பவை எனச் சிலவகைக் காரணங்களைக் கொண்டே இவ்வமைப்பு நேர்ந்திருக்கும். கால மாறுபாட்டாலும், மரபுகள் மறக்கப்பட்டமை யாலும், பூக்களைப் பற்றிய பரவலான எண்ணம் அருகிவிட்டமை யாலும் உண்மையான காரணம் ஒளிந்து கொண்டுள்ளது. புறத்திணையில் பூக்கள் இன்றியமையாச் சின்னங்களாக அமைந்தன. பூச்சூடியுள்ளமை கொண்டே இன்ன போர்க்கு எழுந்துள்ளார் என்பது உணரப்படும். இவ்விலக்கணம் ஏட்டளவா? நடப்பளவா? நூற்றுக்கு நூறு நடைமுறைக்கு உரியது. நடைமுறை வில் இருந்தது. காலப்போக்கில் போர்க் காரணங்களும் முறை களும் மாறிவிட்டமையால் பிற்காலத்தில் நடைமுறையிலிருந்து நழுவிவிட்டது; மறைந்தும் விட்டது. ஆனால், முற்காலத்தில் இது கைவிடக்கூடாத போர் மரபாகக் கொள்ளப்பட்டது. 'தமிழ்கூறு நல்லுலகந்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் என்று பனம்பாரனார் குறித்தமைக்கு ஏற்ப இவ்விலக்கணம் வழக்கில் இருந்ததே. அதிலும் தமிழ்கூறும் நல்லுலகத்தில் தனித்தன்மையான வழக்கத்திலிருந்ததேயாகும். இம்மரபில் கடவுளர்க்கு இடம் இல்லை. கடவுளர்க்கு இடம் கொடுக்கப்பட்டது உண்டு. - கடவுளர் செயல் மரபாகாது உழிஞைத்திணை என்பது மாற் றார் கோட்டையை முற்றுகையிடுதல் என்று கண்டோம். புராணக் கதைகளில் கடவுளர் தம் பகைவரை முற்றுகையிட்ட செய்திகள் உள்ளன திருமால் 'சோ' என்னும் அரணை முற்றுகையிட்டார். சிவன் வானத்தில் உலவிய மூன்று கோட்டைகளை எரித்தார். முருகன் தன் பகைவன் சூரபன்மா கடலில் ஒளிந்து கொண்டபோது முற்றுகையிடுவது போன்று தாக்கினான். இவற்றையெல்லாம் புறப்பொருள் வெண்பாமாலை எழுதிய ஆசிரியர் ஐயனாரிதனார் என்பார் இலக்கணத்துள் அமைத்தார். இவற்றினை உழிஞைத் 1 தொல் : பாயிரம் : 8, 4, 崇17