பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
259


அஃதாவது தமிழ் மக்களது மரபாகி அது கடவுளர்க்கும் ஏற்றப் பட்டது. இதனை ஐயனாரிதனார் கடவுளர் செயலாகக் காட்டி மக்கள் பழக்கமாக்கினார். இவரது இலக்கண அமைப்பிற்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் இவ்விலக்கணத்தை நினைவிற் கொண்டு கற்பனை வளம் கூடிய புராணங்களிலும் கடவுளும் அவரை எதிர்த்த மாந்த மன்னரும் போர்ப் பூ சூடியதாக எழுதினர். இராமாயணத்தில், இராமன், இராவணனை எதிர்த்தபோது, 'துளவியல் தும்பையும் சுழியச் சூடினா னாம். எதிர்த்த இராவணனும், 'மார்பிடைச் சுற்றினான் நெடுந் தும்பையுஞ் சூடினான்' என்றார் கம்பர். கந்தபுராணத்திலும், பாரதத்திலும் பிற புராணங்களிலும் இது போன்று கதையிலும் போர்ப் பூக்கள் சூடுவது காட்டப் கட்டது. கதைப்படி கடவுளராயினும் மாந்தராகத் தோன்றி மாந்தருக் குரிய போர்முறையைக் கொண்டதால் இவ்வாறு அவர்கள் எழுத நேர்ந்தது. காலப்போக்கில் தமிழ் மன்னர்க்குள் போர்களுடனும் வேற்றாருடனும் போர்களும் நேர்ந்தன. வேற்றார் இதற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதன்று எனவே இம்முறை நடைமுறை என்பதிலிருந்து விலகியது. ஆனாலும், இலக்கிய மரபாக நின்றது. இவ்விலக்கிய மரபு மேலும் மாற்றத்துடன் வளர்ந்தது. உண்மையான கைகலப்பாகிய போர்க்குப் புறத்திணைப் பூக்கள் அமைந்தவையுடன் அகத்திணையிலும் இப்போர்ப் பூக்கள் இடம்பெற வைத்தனர் இலக்கியப் படைப்பாளர், 1 கம்பு : முதற்போர் : 1.15, 97.