பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
261


தும்பை முடித்துச் செய்த போர்களில் தோல்வியால் வென்றவன். அவன் இப்போது தும்பை சூடிக்கொண்டான். அத்தும்பையைக் கமபா, "தோகையன்னவர் விழி தொடர் தும்பை' என்றார். தோகை மயில்போன்ற அழகுமகளிரது காதற்கண்கள் தொடர்ந்த தும்பையாம். பள்ளியறையில் காமப்போரில் மகளிர் தம் கண் பார்வையையே தும்பையாகச் சூடி இராவணனைத் தாக்கினர். அதனை இங்கு இழுத்து வைத்து எழுதுவானேன்? இங்கு முடிப்பது புறப்போர் கருதிய தும்பைதான். ஆயினும் இப்போரில் இத்தும்பை உனக்கு வெற்றி தேடித் தராது. மகளிர் அகப்போர் தும்பையில் நீ தோற்றாய். அத்தோல்வியை முன்னறிவிப்பாக காட்டித்தான் இதனைச் சூடுகிறாய்” என்பதுபோன்று உட்குறிப்பு வைத்துப் பாடினார். மிகச் சுற்றி வளைத்து-ஆனால், சுவை ஊறுமாறு அவர் படைத்த பாட்டு புறப்பாட்டாயினும் அக இசையில் ஒலிக்கின்றது. இங்கு இதனைப் புறப்பூவை அகப்பூவாகவும் இலக்கியம் காட்டுவ தாகக் கொள்ளலாம். - மற்றொரு போர். மகளிரும் மகளிரும் மோதிக்கொள்ளும் போர். கற்பனைதான். இதனாலும் அகப்போராகின்றது. தெய்வ மகளிர் காரணமாக நிகழும் போர். வள்ளிக்கும் தேவயானைக்கும் பூசல். உடன்களத்தி-சகக்களத்தி-போராட்டம். தோழிமார் படை கள். மிகத் திறமையான போரைச் செய்தனராம். இதனைக் காட்டும் பரிபாடல் புறத்திணை மொழியில் பாடுகின்றது: 'குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர் வித்தகத் தும்பை விளைத்தனர்', 'வித்தகத் தும்பை' விளைத்தனராம். உடல் போரானாலும் உள்ளப் போரானாலும் போர் போர்தானே என்று கருதிப் புறப் பூவிற் பேசினார், புலவர் குன்றம்பூதனார். - - - , அகத்துறையில் ஒருதலைப் போர் உண்டு. படைகளால்வன்மையால் - தாக்காமல் பணிந்த சொற்களால் கெஞ்சு மொழி களால் தாக்கும் போர். தான் விரும்பிய குமரியைப் பெற்றோர் தர மறுத்தாலும், அவளே பாராமுகமாக இருந்தாலும் அவன் 1 கம்ப : தேரேறு படலம் : 16 2 பரி : 9 : 67, 68,