பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முள்ளி மலர் - அணிற் பல்

முருக்குமலர் - புலி நகம்
கவிர் மலர் - சேவலின் நெற்றிக் கொண்டை

ஈங்கை மலர் - சிட்டுக்குருவிக் குஞ்சு புன்கு - பொரி அவரைப் பூ - கிளிமூக்கு அகத்திப் பூ - பன்றிப் பல் ஊமத்தம் பூ - எக்காளம் ஊகு - அணில் வால் கரும்புப் பூ - குத்திட்டு நிற்கும் வேல் அடும்புப் பூ - குதிரை கழுத்தில் கட்டப்படும்

                    சதங்கை

வெண்கடப்பம் - பந்து செவ்வலரி - குருதி தோய்ந்த குடர் நொச்சி இலை - மயிலின் காலடி அடும்பு இலை - மான் குளம்பு காந்தள் கிழங்கு - கலப்பை

துாய்மைக்குத் தும்பையும், கருநீலத்திற்குக் காயாம் பூவும் என்றுமுள எடுத்துக்காட்டுகளாம். மாணிக்கக்கல்லில் 'குருவிந்தம்’ என்னும் வகையின் நிறத்திற்குத் திலக மலர் நிறம் கூறப்படும். தெறுழ் பூ, களிற்றின் நெற்றியில் தோன்றும் புள்ளி வடிவில் பூக்கும். பிடவ மலர் கொத்தாகப் பூத்துக் குலுங்குவது. பால் கறக்கும் முழவில் பால் நுரை பம்பி நிற்பது போன்றிருக்கும். கொன்றைக்காய் திரண்டு தொங்கும் தோற்றம் தவம் செய்வோரது திரண்ட சடைக்கற்றைப் போன்றது. பகன்றை மலர், புதுத் துணியை முருக்கிக் கஞ்சி தோய்த்து நீரில் அடித்துப் பிழியும் போது நிற்பது போன்ற தோற்றமுடையது.

இவ்வுவமைகளைக் காணும் போது பண்டைத் தமிழ்ப் புலவர்கள் இயற்கையில் தோய்ந்த திறமும், இவற்றைத் தொகுத் தளித்த இளஞ்சேரனாரின் அயரா உழைப்பும் நன்கு புலனா கின்றன. -