பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265


செங்குட்டுவனது வடதிசைப் போரில், 'வாகை தும்பை வடதிசைப் போரில், - வேக யானை' யைக் காண்கிறோம். அத்துடன் மற்றொன்றையும் இவ்வடிகள் அறிவிக்கின்றன. யானை சூடிய பூக்களாக இரண்டு பூக்கள் உள்ளன. இரண்டும் புறப் பூக்கள். ஏன் இரண்டு பூக்கள் இடம் பெற்றன? புறப் பூக்கள் ஒவ்வொன்றும் அவ்வத்திணை நிகழ்ச்சிக்கேற்பத் தனித்தனியே சூடப்படுவதுதான். தொடர்பு கருதி இரண்டு பூக்கள் இடம்பெற்றன. என்ன தொடர்பு? கைகலந்து போர் செய்வது தும்பைத் திணை. இதற்கு உரியது தும்பைப் பூ. இப்போர் ஆநிரைகளைக் கொண்டபின் மீட்டும் போர்க்களம் அமைக்கவும், கவர்ந்தோர். அவரை எதிர்த்துக் களம் அமைக்கவும் களத்தில் போர் நிகழலாம். இது வெட்சிப் போர். வஞ்சிக் சூடிச் சென்ற உடனேயே களத்தில் போர் நேரலாம். இது வஞ்சிப் போர் முற்றுகையின்போது டோர் நேரலாம். இஃது உழிஞைப் போர். அவ்வந் நிகழ்ச்சிக்கு ஏற்பச் சூடப்பட்ட திணைப் பூவுடன் கைகலக்கும் தும்பைப் பூவும் இணைத்துச் சூடப்படும். இதனைத் தொல்காப்பியத்திற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், ‘வெட்சிப் புறத்துத் தும்பை' 'வஞ்சிப் புறத்துத் தும்பை' 'உழிஞைப் புறத்துத் தும்பை” - என்று காட் டினார். இதற்கேற்பச் சிலப்பதிகாரம் குறி காட்டுகின்றது: சேரன் செங்குட்டுவன் 'வடதிசைத் தும்பை வாகையொடு முடித்து’ 3 விளங்கினான். அவனது யானையும் 'வாகை துமயை வடதிசைச் சூடியது” ஆணுல், இவ்வாறு இரண்டு புறப் பூக்கள் சூடும் காட்சியைச் சிலம்புதான் காட்டுகின்றது. அதனிலும் தும்பையோடு மட்டும் சூடப்பட்டதாகக் காண்கிறோம். இதற்குமேலும் போர் வீரர் மன்னரது தலையை நோக்கினால் மூன்று பூக்களைக் காணலாம். மூன்றாவதுபூவோ முதற் பூவாகும். அஃது அரசர்க்குரிய ஆத்தி வேம்பு, பனம் பூக்களில் ஏற்ற ஒன்றாகும். . . 1. சிலம்பு : 27 221, 222, - 2 தொல் : புறத்திணை நூற்பா 16 உரை. 3 சிலம்பு: 27 : 198.