பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267


செய்யுள் அடிகள் ஒரு விளக்கத்தைத் தருவன."வெட்சிக் கான்ம்." "கடத்திற் கிளைத்த’ என்பவற்றால் வெட்சி காட்டில் வளர்வது; காடுபோன்று பெருகி வளர்வது, தளைத்துக் கிளைவிட்டு வளர் வது எனத் தெரிகின்றது. மேலும் 'முடச் சினை” என்றதனால் வளைந்த கிளைகளை உடையது என்பதும் தெரிகின்றது. இலக்கியங்களில் இத்தொடர் வளைந்த கிளைகளையே குறிக்கும். இவ்வடைமொழி பெற்றுள்ள புன்னை, ஓமை மருதம், காஞ்சி முதலிய மரங்கள் வளைந்த கிளைகளை உடையவை. எனவே, வெட்சி ஒரு மரம். % இதன் பூ கோட்டுப் பூ. "புல்லிலை வெட்சியும் பிடவும் தளவும்' - என்பதால் இதன் இலை புல்லிய இலையாகும். புன்மை என்னும் சொல் பல பொருள் தரும். "புல்லிலை நெல்லி' என்பர். இங்கு சிறிய இலை என்ற அளவில் சிறுமையைக் குறிக்கும். 'புல்லிலை எருக்கு' எனப்படும். இங்கு வெறுப்பான மணத்தைத் தரும் இலையாகை யால் இழிவு’ என்னும் பொருள் தரும். 'புல்லிலை வெதிர்' என்னு மிடத்தில் அகலமில்லாத சிறுமையோடுசொறசொறப்புள்ளமையால் இலைக்குரிய மென்மை இல்லாத குறை'யைக் குறிக்கும். வெட்சி ஓரளவு அளவில் சிறிய இலையைக் கொண்டது. வெறுப்பான மணமுள்ளதன்று. அவ்வாறாயின் சூடிக்கொள்ளக் கொண்டிருக்க மாட்டார்கள், ஒரளவு மொறமொறப்புள்ளது. இப் பூவின் நிறத்தை, முன்னே கண்ட செவ்வானம் செல்வதுபோல் செல்கின்றார்" என்றதால் நல்ல செம்மை நிறம் என்று அறியலாம். அத்துடன் "செங்கால் வெட்சி' எனத் திருமுருகாற்றுப்படை குறிப்பதனையும் கொண்டு முழுச்செம்மை மலர் என்று கொள்ளலாம். இதற்குரிய மறுபெயர் செச்சை என்பது "செச்சை செம்மை என்னும் பொருள்கொண்டது. எனவே வெட்சிப்பூ நல்ல செம்மை நிறங்கொண்டது. காம்புமுதல் முழுதும் செம்மை நிறம் கொண்டது. «» в а в ° 4 в خصصمم بومs s= e s ۹وع sss »د வெட்சித் தளையவிழ் பல்போது கமழும் - மையிருங் கூந்தல் மடந்தை நட்பே' எனக் குறுந்தொகை 1 கலி ; 108 : 1. 2 குறு : 208 : 6, 1.