பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268


குறிப்பதால் இது மணம் கமழும் பூ. மகளிர் கூந்தலில் ಕಾಹಿ ஏறும் அளவில் மணம் கமழ்வது, மேலும் இவ்வடிகளைக் கொண்டு சூடப்படும் பூ என்றும் அறியலாம். இங்கு, தனியாக சூடப்பட்டதைக் காண்கின்றோம். "வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல் நெய்தல் புன்னை மருதம் கூட முடித்த சென்னியன்"1 -என்பதால் பிற பூக்களுடன் தொடுத்துத் தலையில் சூடப்படும் என்பதையும் அறியலாம். அத்துடன் ஆடவரும் ஒப்பனையாக அணிவதையும் உணரலாம். "செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு' என்னும் திருமுருகாற்றுப்படை அடியில் "சீறிதழ்” என்பதால் இதன் இதழ் சிறியது எனக் காண்கின்றோம். இதழ் சிறியதாயினும், வெட்சி மா மலர் வேங்கையொடு விரை இ'8 எனும் புறப் பாட்டால் இதன் பூ பெரியது என அறியலாம். அதன் பழைய உரைகாரரும் "வெட்சியினது பெரிய மலரையும்' என்றே எழுதினார். எனவே சிறிய இதழ்கள் பலகொண்டு காலுடன் கூடிய பெரிய பூ. به விடு பூ மேற்கண்ட திரு முருகு அடியில் 'இடையிடுபு' என்னும் சொற்றொடர் இடையே இடப்படுவது என்று குறிக்கின்றது. பல பூக்களால் மாலையாகக் கட்டும்போது மாலையில் இடைவெளி தெரியும். அவ் இடுக்கில் இப்பூவைச் செருகி இடுவர். இவ்வாறு இடையே விடப்படும் பூவை "விடு பூ' என்பர். இது மாலைக்கு அழகு ஊட்டுவதாகும். மேற்கண்ட அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், - 'சிவந்த கால்களையுடைய, வெட்சியுடைய - சிறிய பூக்களை விடு பூவாகத் தூவி' -என்று விடுபூ வாக விளக்கினார். ஆனால், இங்குச் சிறிய பூக்களை’ எனச் சிறிய 1. சிலம்பு : 22 : 88-10, - 2 திருமுருகு :21, 22. មិ ឬពង្រី 100 : 5