பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269


பூவாகக் குறித்தது பொருந்துவதாக இல்லை. விடு பூவாக அறிவிக்கும் இடையிடுபு' என்னும் தொடரைப் பரிபாடலும்,

    • βλόλιώξωήrή

எரிநகை இடையிடுபு இழைத்த நறுந்தார் புரியலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்' -எனத் திரு மாலை விளித்தது. இங்கு, துழாய் மாலையின் இடையில் விடு பூவாகச் செருகப்பட்டுள்ளது. மேலும் 'இழைத்த’ என்றதால் அழகு ஊட்டப்பட்டதாகக் கொள்ளலாம். இவ்வடிகளில் வெட்சியைக் குறிக்க உரிய நேர்சொல் இல்லை. வெல்போர் எரிநகை' என்னும் தொடரைக்கொண்டே வெட்சி மலரைக் காணவேண்டும். வெல்போர்' என்றதால் போருக்குரிய புறப் பூ என்றறியலாம். "எரி நகை' என்றதால் தீப்போலும் சிவந்த நிறத்தது என்றும் கொண்டு உரை எழுதியவர் வெட்சிப் பூ என்றே எழுதினார். இது பொருந்துவதே. இது விடு பூவாக அழகு ஊட்டப் பயன்படுத்தப்படும் என்பதை மற்றோரிடத்திலும் காண முடிகின்றது. மதுரை வையை ஆற்றுப் புது வெள்ளத்தில் மகளிரும் மைத்தரும் நீராடச் செல்கின்றனர். கண்ணி சூடிய காளையர்; கோதை சூடிய கன்னியர்; தார் அணிந்த மைந்தர், மகளிர் அணி அணியாகச் செல்கின்றனர். இதனைப் பரிபாடல், 'ஈர் அமை, வெட்சி இதழ் புனை தாரார் முடியர் தகைகெழு மார்பினர் கோதைய'2 ரைக் காட்டுகின்றது. இதில் 'இதழ் புனை தார்' என்பது தார் வெட்சிப் பூவால் புனையப்பட்டதை, அஃதா வது புனைந்து அழகு ஊட்டப்பட்டதைக் காட்டுவதாகும். இவ் வாறு அழகு ஊட்ட வெட்சியின் சிறிய இதழ் பயன்படுத்தப் பட்டது. இவ்விதழ், 'ஈர் அமை வெட்சி இதழ்’ எனப்பட்டது. இதனால், இப் பூ தேன் நெய்ப்பால் ஈரம்பெற்றதாகவேண்டும். அன்றி இயற்கையில் ஈர நைப்பு உள்ளதாக அமைந்திருக்க 1 பரி : 18 : 59, 60. 2 us ; 22 : 22, 28