பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270


வேண்டும். இயற்கையில் ஈர நைப்பு அமையப்பெற்றது r . பதை "ஈர் அமை” என்றதில் அமை' என்னும் சொல் வலியுறுத்து கின்றது. எனவே இதன் இதழ் ஈரப் பிடிப்புள்ளது. இப் பூவின் முகைபற்றி ஒர் உவமையால் அறிய முடி கின்றது. இதல்' எனப்படும் காடைப் பறவையின் கால்களில் பின்புறத்தே ஒரு விரல் அமைப்பு முள்போன்று தோற்றமளிக்கும், இதனைக் காட்டி, "இதல் முள் ஒப்பின் முகைதிர் வெட்சி';T என்றார் மருத்துவன் தாமோதரனார். பிடவம் என்பதன் முகையும் இது போன்றதே. எனவே இதன் முகை கூரிய முனையுடையது என்றாகின்றது. இவ்வடியை அடுத்து வருவது ' கொல் புனக் குருந்தொடு கல்லறை தாஅம்" -என்னும் அடி. இதனால் குருந்தம் பூவுடன் உதிர்ந்து கிடப்பதை அறியுங்கால் இது தனிப் பூவாக உதிர்வதை அறியலாம். யாவற்றையும் ஒன்றுகூட்டி வெட்சிப் பூ, கோட்டுப் பூ: முல்லை நிலத்தது; புல்லிய இலைகளை உடையது; செம்மை நிறங்கொண்டது; மணம் கமழ்வது; ஒப்பனை கருதியும் சூடப்படுவது; சிறிய இதழ்களைக் கொண்ட பெரிய பூ: மாலையில் விடு பூவாகப் பயன்படுவது: ஈர நைப்புடையது; . - விரைவில் உதிரக் கூடியது -என்றெல்லாம் கொள்கின்றோம். • , . m« 1 அகம் : 188 : 14,15,