பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271


வெட்சி

விருச்சியா?

ஆனால் இக்காலத்தில் விருச்சி - பிருச்சி' என வழங்கும். பூவை வெட்சி என்று கருதுகின்றனர். இப்பூவை உளத்துக் கொண்டே கலைக்களஞ்சியத்திலும் வெட்சிப் பூவிற்கு, செடி அல்லது குற்றுமரம், பூ சமதள வளரா துணி, கொத்துப் பூ; வெள்ளை நிறமும் உண்டு; செவ்வெட்சிப் பூ அழகு; குளக்கரையில் வளர்வது' என்றெல்லாம் விளக்கமளிக்கப் பட்டுள்ளது. இலக்கியங்களில் காணப்பட்ட 'பல்போது' "செங் கால்", "சீறிதழ்’ என்பன இவ் விளக்கத்திற்குச் சான்றாகலாம். ஆனால், ‘வெட்சி கொத்துமலர்' என்று எங்கும் சுட்டப் படவில்லை. “இணர்க்கொன்றை', 'காஞ்சித் துனர் இணர் ததை ஞாழல்' என்றெல்லாம் கொத்தான மலர்கள் அடைமொழி கொடுக்கப்படும். இவ்வாறு வெட்சி காட்டப்படாமையால் கொத்து மலர் அன்று. விருச்சி என்பது மணம் கமழ்வது அன்று. இலை புல்லியது அன்று. கொய்யா இலை வடிவத்தில் மேலும் சற்று நீளமானது. நொய்தானதும் அன்று. புன்மை என்னும் சொற்குப் பொருந்துவதன்று. யாவற்றிற்கும் மேலாக இது குற்றுச்செடி. தரையில் பெருங்கோலாக நீண்டு வளர்ந்து அதன் கொப்பில் பூப்பது. வளைந்த கிளைகளை உடையது அன்று. எவ்வகையிலும் மரமெனல் பொருந்தாது. இதில் வெண்மை நிறக்கொத்து உண்டு. வெட்சியில் வெண்மைநிறம் குறிக்கப்படவே இல்லை. இவ்வகையிலும் பொருந்தாது. ஈர நைப்புடையதும் அன்று. விரைவில் உதிராது. கொத்தாகவே வாடும். விருச்சி என வழங்கப்படும் இப் பூ வெட்சிப் பூ அன்று தான். இது வெட்சியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. விருச்சி என்ற இதன் பெயரும் வெட்சியின் தொடர்பில் உண்டானது. . தமிழர் திருமணத்தில் முல்லைப் பூவுடன் நெல்லைக் கலந்து தூவி வாழ்த்துவது மரபன்றோ? நற்சொல் சொல்லும் சோதிடம் விருச்சி' எனப்படும். இவ்விருச்சிக்கு முல்லையொடு