பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273


மற்றொரு பெயராகிய செச்சை இலக்கிய வழக்கில் இடம் பெற்றது. 'பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்" 1 என அகப் பொருள் தலைவன் சூடியதையும், 'கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்" 2 - என முருகன் முடிமேல் ஏறியதையும் காட்டின. "செச்சை என்னும் சொல், பசுமை-பச்சை ஆனது போன்று செம்மைஎன்பதன் மருஉ மொழி. வெட்சி முல்லை நிலத்துப் பூ. இதனை

  • வெட்சி கானம்' , 'கடத்திற் கவித்த' என்னும் சொற்றொடர் கள் காட்டில் முல்லை நிலத்தில் காட்டும் தினைப்பயிர் கொய்யப் பட்ட பின் இதன் அடித்தட்டைகள் எரித்து அழிக்கப்படும். இவ்வாறு அழிக்கப்பட்ட புனம், அஃதாவது தினைக் கொல்லை 'கொல் புனம்' எனப்படும். அப்புனத்தின் இடையில் உள்ள பாறைகளில் வெட்சிப்பூ உதிர்ந்து கிடக்கும். பக்கத்தில் உள்ள குருந்த மரப் பூவும் இத்துடன் உதிர்ந்து கிடப்பதை முன்னரே கண்டோம். தினைப்புனம் முல்லை நிலம். குருந்தம் பூவும் முல்லை நிலப் பூ. இவற்றால்,

வெட்சிப் பூ முல்லை நிலப் பூ. முல்லை நிலப்பூவாயினும், புறத்திணைப் பூவாக எங்கும் சூடப்படும். வெட்சிப் போரில் வெற்றி பெற்றதும் கவர்ந்த ஆநிரை களை முறைப்படி பரிசாகப் பங்கிட்டுக்கொண்டு விழாக்கொண்டாடு வர். அவ்விழாவிலும் வெட்சி சூடிப் பாடி, ஆடுவர். இவ் வகைப் போர் விழா சிறுகதையாக முடிந்துவிடுவதன்று. தொடர்கதையாகத் தொடரும். விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது தமது ஆநிரை களைப்பறிகொடுத்தோர் ஆர்ப்பாட்டமாக எதிர்த்து வந்து விடுவர். போர்க் கதை தொடங்கும். இக்கதையில் வெட்சிப் படலத்தோடு கரந்தைப் படலம் தொடரும். தொடர வந்தவர் தலையில் வேறு ஒரு மாற்றுப்பூ தெரியும். அது என்ன பூ? 1 sasih : 48 : 10, 2 திருமுருகு : 208. 米18