பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
274


மீட்கும் மலர் கரந்தை கரந்தை வயல் அதுதான் கரந்தைப் பூ. இப்பூவால் பெயர்பெற்றது கரந்தைப்போர். தமது ஆநிரைகளைப் பறிகொடுத்தோர் அவற்றை மீட்கும் போருக்கு முனைவர். அதன் அடையாளமாகக் கரந்தைப் பூவைப் போர் மரபிறந்த அறிஞர், வீரரது தலையில்சூட்டுவர். இவ்வாறு, - 'விசகறியாளர் மரபிற் சூட்ட" இவ்வீரர் இப்பூவால் கரந்தையார் ஆவர். இப்படையைக்காண்போர் இவர் ஆநிரைகளை மீட்கச் செல்கின்றனர்' என, கரந்தையஞ் கன்னியாற்கண்டு 2 கொள்வர், ஆநிரைகளை மீட்கமட்டும்.அன்று, யானை முதலிய பிற கவரப்படின் அவற்றை மீட்கவும் கரந்தைப் பூவைச் சூடிச்செல்வதும் உண்டு. இப் பூவைத் தலையிற் கண்ணியாகச்சூடுவதுமட்டுமன்று; மாலையாகவும் அணிந்து, - "தொடலைக் கரந்தை மரவ' 8 ராக விளங்குவர். வீரர் இப்பூவாற் பெயர் பெறுவது போன்று, இது விளையும் நிலமும் இதனை அடைமொழியாகப் பெற்றது. - இது வயற்புறங்களில் பயிர்த்தொழில் முடிந்ததும் முளைக் கும். வயலில் நிறைய வளர்வதால் இவ்வயல், 'கரந்தை அம் செறுவில் பெயர்க்கும்’4 'கரந்தை அம் செறுவில் வெண்குருகு ஒப்பும்' -என்று கரந்தை வயல் எனப்பட்டது. விளையும் நிலத்திற்கும் தனது பெயரை இவ்வாறு ஏற்றும். விளை நிலம் வயலாததால், இது மருதநிலப் பூ 1 ບຸp໖ : 261 : 14. - 2 தொல் : புறத் திணையியல். மேற்கோன் பாடல், 3 பெரும்பொருள் விளக்கப் பாடல், # tịpià : 340 : 8 5 அகம் : 25 : 5