பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
275


'காய்த்த கரந்தை மாக் கொடி விளைவயல்' என்றார். காப்பியாற்றுக் காப்பியனார். 'மாக்கொடி’ என்பதில் மா கருமை யைக் குறிக்கும். எனவே, இதன் கொடி சற்றுக்கரிய நிறமுடையது. எனவே, இது கொடிப் பூ மான்மடிக் காம்பு ஆவூர் மூலங்கிழார் என்னும் வேளாண்குடிப் புலவர் இப் பூவில் மனம் பதித்தார். ஆவலோடு நோக்கினார். இவர் நினை வில் இளைய மரைமான் நினைவிற்கு வந்தது. அதன் சிறிய பால் மடிக்காம்பு கண்ணில் நின்றது. இக்காம்பு குமிழ் வடிவம் கொண்டது. அதனை உவமையாக்கி, "நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை' * * -என்று பாடினார். இத்தோற்றமுடைய பூ குமிழ் வடிவப்பூ எனப்படும். இவரது உவமையொடு "நறும் பூங் கரந்தை” என்றமைந்த தொடர் இதன் மணத்தைச் சொல்லுகின்றது. ஆம், இது மண முள்ள பூ மணம் மென்மையானதன்று; சற்று அழுத்த மணம் கொண்டது. இதனால், நச்சினார்க்கினியார் இதனை, "நாறு கரந்தை' என்றார். 'நாறு கரந்தை யினானும்” என அப்பரும், 'சடைமேவு நாறு கரந்தையோ’’ எனச் சுந்தரரும் குறித் தனர். சிலர் கரந்தையுள் இஃதொருவகை என்பர். இப்பூவை ஆத்தி மரப்பட்டையை அம்பால் ஈர்ந்துக் கிழித்த நாரில் கட்டிச் சூடிக் கொள்வர். இதன் நிறம் சிவப்பு. மருதன் இளநாகனார், 'அம்புகொண் டறுத்த ஆர் உரிவையின் செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி'8 என்றார். 'செம்பூங் கரந்தை” இதன் செய்மை நிறத்தைக் காட்டுகின்றது. இதனைக் 'காய்த்தை கரந்தை"என்று இது காய்ப்பதை ஒரு குறிப்பாகக் காட்டுவதால் இதன் காய் நோக்கத்தக்கது. 1. பதிற் : 40 : 5, 6, 8 அகநானூறு : 269:10, 11. 2 புறம். 261 : 18. . - 2: . . : ...?