பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மேற்செலவு மலர்

வஞ்சி

கொடிப் பெயர்


வஞ்சிப் பூவாற் சொல்வது போன்று தலையிற் சூடிப் போர்க்கு எழுவர். வட்கார் மேல் செல்வது வஞ்சி' என இப் போர் இப் பூவாற் பெயர் பெற்றது. - 'வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை' -என்றும், 'வஞ்சி ஓங்கிய யாணர் ஊர'2 -என்றும் வஞ்சி மரம் அறியப்படுகின்றது. வஞ்சியில் மரமும் உண்டு. வஞ்சிக் கொடி யும் உண்டு. எதன் பூவைப் புறப் பூவாகக் கொண்டனர்? இலக்கண இலக்கியங்களில் எது என்று குறிக்கப்படாததால் இது வினாவில் இடம் பெறுகின்றது. வஞ்சி என்னும் சொல் பலபொருள் ஒரு சொல். "பகைவர் மேற்சேரலும் புதலும் (கொடியும்) மங்கையும் பாவிலோர் பாவும் ஓர் பதிப்பெயரும் . மாற்றார் குடையும் வஞ்சி யாகும்’8 -எனப் பிங்கல நிகண்டு பொருள்களை அடுக்கியுள்ளது. இதற் கேற்ப இலக்கிய ஆட்சிகளும் உள. எனவே, கொடியென்னும் பெயரே பெரும் வழக்காகின்றது. இப்பொருள்களில் "ஒ ரூ ர் ப் பெயரும் வஞ்சி யாகும்”. அவ்வூர் கொடிப்பூவாற் பெற்ற பெயர் என்பதை,. 'பூங்கொடிப் பெயர்ப் படு உம் திருந்திய நன்னகர்' - என்பதனாலும் அறிய லாம். இவ்வாறாகச் சொற்பொருளும், ஊர்ப்பெயராகும் குறியீடும் கொடிப் பெயரோடு தொடர்புடைமையால் கொடிப்பூவையே கொண்டனர் என உணரலாம். எனவே, வஞ்சி என்னும் புறத்திணைப் பூ கொடிப் பூ. 1. புற : 884 : 2 2 பில். :4015 2 ஐங் : 50 : 2 4 மணி 28:101, 102.