பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278


செந்நிறப்பு பூவின் தொடர்பிலேயே ஊர்ப்பெயர் அமைந்ததைப் :பூத்த வஞ்சி பூவா வஞ்சியிற் (வஞ்சிமாநகரில்) போர்த்தொழில் தினை குஞ்சியிற் புனைய" என்றதில் பூத்ததும் பூவாததும் உணர்த்துகின்றன. போர்மேற் சென்ற மன்னரைக் குறிக்கும் மதுரைக் காஞ்சி, சூடு உற்ற சுடர்ப் பூவினைச்' - சூடிச் சென்றதாகக் குறித்தார். இங்கு, 'குடு உற்ற' என்பது சூடுதற்குப் பொருந்திய எனப் புறப் பூவாகச் சூடுவதைக் குறிக்கும். எனவே, வஞ்சிப் பூவாகும். இப் பூ சுடர்ப் பூ’. பூவிற்கு அடைமொழியான சுடர் என்னும் சொல் நெருப்பு, விளக்கம், ஒளி என்னும் பொருள்களில் அமையும். கடர்ப் பூங் கொன்றை”8

  • சுடர் இதழ்த் தாமரை”4 -என இம் மதுரைக் காஞ்சியிலே வருகின்றன. கொன்றையும் தாமரையும் வெவ்வேறு நிறத்தவை. இரண்டிடத்திலும் நச்சர் "ஒளியை உடைய” என்று ஒளியாகப் பொருள் எழுதினார். "சுடர்ப்பூ இலஞ்சி' என்னும் இடத்திலும் ஒளியாகப் பொருள் கொண்டார். குளத்தில் பல நிறப் பூக்கள் உள்ளமையால் ஒளி நிறத்தைக் குறிப்பதாகாது. இங்கு 'சூடு உற்ற சுடர்ப் பூ” என்றதற்கு 'விளக்கத்தை உடைத்தாகிய வஞ்சியினை” என்று விளக்கப் பொருள் எழுதினார். இதுபோன்று பிற நூல்களிலும், -

"சுடர்ப் பூங் காந்தள்' "சுடர் புரை தோன்றி' - எனப் பெரும்படியாகச் சிவந்த நிறப் பூக்கள் சுடர் என்னும் அடைமொழி பெற்றுள்ளன. மேலும், 'வாடா வஞ்சி தலைமலைந்து' எனப் பொன்னால் செய்த வஞ்சிப் பூவைச் சுட்டுவதால் நிறங்கருதி அல்லாமல் ஒளியை உடைய பூவாகவும் கொள்ள வேண்டும். இவ்வாற்றால், வஞ்சிப் பூ செம்மை நிறப் பூ. 1 மணி :26:18, 1 4 Aது கா : ?10 2 ሠሡጫo 225, திருமுருக : 48 8 மீது கா: 227: 8 அகம் :364:6.