பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/315

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
279


பாட்டில் வஞ்சி

போர்த்தொடர்பான அறிவிப்புகளின்போலும், விழாக் களிலும் கிணை’ என்னும் தடாரிப்பறை முழக்கப்படும். இப்பற்ை அரித்து எழுவதுபோன்று ஒலிப்பது. இப்பறையை ஓங்கிஅடித்துப் பாடலும் பாடப்படும். இப்பாடல் இசை, வஞ்சிப் பெயர் பெற்றது. 'அரிக்கூடு மாக்கினை இரிய ஒற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட' என்பதில் எஞ்சா மரபின் வஞ்சி” என்றிருப்பது இப்பாடல் பாடப்படுவது வழி வழி வழக்கம் என்பதையும், அம்மரபிற் குறை நேராது பாடப்படும் என்பதை யும் அறிவிக்கின்றது. இவ்விசையை 'மருத யாழ்த்திறத்து ஒர் ஒசையாக’2 வகுத்தனர் இசை நூலார். இவ் வஞ்சியின் பெயரால் 'வஞ்சிமாலை', 'பேர் வஞ்சி' என்னும் புற நூல்கள் உள. ‘வஞ்சிப்பாட்டு’ என்றொரு நாடக நூல் இருந்து மறைந்தது. ‘வஞ்சிப்பா என்னும் பாடல் வகையும் எந்த வஞ்சிப்பும் இல்லாததால் இப் பூவின் ஆகுபெயரால் பெயர்பெற்றதே. வஞ்சி என்னும் சொல் வஞ்சிப்பதைக் குறிப்ப தாயினும் போரில் வஞ்சியாமல் நேர்மையை அறிவிக்கும் சின்னமாக நற்செயல் புரிவது. எனவே, வஞ்சியாத வஞ்சிப் பூ. வஞ்சிக்காத பூவிற்கும் ஒர் எதிர்ப் பூ எழுந்தது. அது காஞ்சிப் பூ. எதிருன்றும் மலர் காஞ்சி கோதைப் பூ காஞ்சிப் பூவாற் பெயர் பெற்றது காஞ்சித் தினை. ஆயினும் இத்திணை காஞ்சிப் பூ சூடப்பட்டுப் பெயர் பெற்றதும் உண்டு. சூடப்படாமலே பெயர் பெற்றதும் உண்டு. தொல் காப்பியர் காஞ்சித் திணைக்குச் சான்றோர் அறிவுரைப் 1 upພໍ່ : 878 : 8, 9. 2 பிங், நி : 4016,