பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
281


இது கோட்டுப் பூ. இப் பூ கொத்தாக மலரும். இக்கொத்து, 'அவிழ் இணர்க்காஞ்சி' (அகம் : 341; 9) என்றும் “பயறுபோல் இணர' (குறுந்தொகை : 10 : 2) என்றும் 'கோதை இனர குறுங்காற் காஞ்சி' (அகம் : 298 : 1.) என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றின்படி இப் பூ மலர்ந்த கொத்துப் பூ. பயற்றங்கொத்து போன்ற கொத்து. அக்கொத்து கள் தொடர்ந்து கோதை போலப் பூக்கும். ஒரு கொத்து மட்டும் அன்று. கொத்துகள் தொடர்ந்து, போகப் போகச் சிறுத்துத் தொடுத்தது போன்றிருக்கும். இத்தோற்றம் ஒரு மாலை தொடுத்தது போன்று அழகானதாகும். இவ்வழகைக் கண்டு களித்த நல்லூர் நத்தத்தனார், "தறும் பூங் கோதை தொடுத்த நாட்சினைக் குறுங்காற் காஞ்சிக் கொம்பர்' -என்றார். இதனை விளக்கும் நச்சினார்க்கினியர், "நாட்காலத்தே மாலை கட்டினாற் போல இடையறாமல் தொடுத்த நறிய பூக்களையுடைய சிறிய கொம்புகளையும், குறிய தாளினையும் உடைய காஞ்சி மரம்' என மாலை கட்டியது போன்று தொங்குவதைக் காட்டியுள்ளார். இடையறாமல் தொடுத்த நறிய பூக்கள்' என்று உள்ளமை இப் பூ இடை வெளியின்றிச் செறிந்து பூப்பதைக் காட்டுகின்றது. நறுமணம் கமழும் பூவும் ஆகும். பூக்குங் காலத்தில் பெரும்பகுதி பூவாகத் தோன்றுவதால் இதன் பூ மிகுதி கருதிப் 'பூங்காஞ்சி' என்று சிறப்பிக்கப்பட்டது. காமனும் இந்திரனும் நேர் இப் பூ, அளவில் சிறிய பூ இதழ்கள் சிறியன. இதன் கோதை அமைப்பு அழகு நிறைந்தது. இதனால், அழகின் உருவகத் தெய்வம் காமவேளின் நினைவு எழுந்தது நல்லந்து வனார்க்கு. அழகுத் தோற்றத்தால் மட்டுமன்று நிறத்தாலும் காமனைப் போன்று கண்டார். கண்டவர், I சிறுபான் ; 178, 179.