பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282


'மினேற்றுக் கொடியான் (காமன்) போல் மிகுறு ஆர்க்கும் காஞ்சியும்” என்று பாடினார். மீன் போத்தின் கொடியை உயர்த்திய காமன் கார்வண்ணத் திருமாலின் காதல் மகன். தந்தை கருமை, மகன் கருமை. கருப்பின் கண் உள்ளது அழகு’ என்பது காமவேளுடனும் தொடர்பு உடைய தொடர். நீலத்தைக் கருப்பென்றல் இலக்கிய வழக்கு. கார்வண்ணக் காமவேள் நினைவில், கருங்காரை ஊர்தியாகக் கொண்ட இந்திரன் நினைவு தோன்றலாம். பரஞ்சோதியார்க்குத் தோன்றியது. "மங்குல் (கார்) ஊர் செல்வன் போல் மலர்ந்தன காஞ்சி” என்றார். இந்திரனும் கரு நிறத்தவன்

புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன்' (பிங்கலம் 160 : 11)

கரியவன் சுனாசி ஆகண்டலனுடன் வலாரி' (சூடா நிகண்டு : தெய்வப்பெயர் 20 : 3.) என்றெல்லாம் நிகண்டுகள் இந்திரன் நிறத்தைவைத்துக் கரியவன் என்றன. கருமையால் 'மால் முகிலூர்தி’ எனச் சேந்தன் திவாகரம் 'மால்' என்னும் பெயரையும் வகுத்தது. மணிபல்லவத் தீவில் ஒரு புத்த பீடிகை இருந்தது. அஃது இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் அமைத்ததைக் குறிக்கும் மணிமேகலை, - *. கரியவன் இட்ட காரணத் தானும்’3 -என்றது. ததீசி முனிவரது பொன் நிறமான முதுகுத் தண்டைப் பெற்று ஏந்தி நின்றான் இந்திரன். அவனை மைம் முகில் ஊர்தி ஏந்தி மின் விடு மழைபோல் நின்றான்:4 -என்றார் பரஞ்சோதியார். மின்னல் ஏந்திய கருமேகம் என்றார். கொலைப் பழி நீங்கி நின்ற இந்திரனை, 1. கன் 26 : ) 2 திருவிளை, பு இந்திரன் தருமிக்கு : 1.2 8 மணி 25 : 55 4 சீகுவினை. பு : இந்திரன் : 26 4