பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
283


'மாசிற் கழிந்த மணியேபோல் வந்த பழி தீர்த்தித்திரனும்"1 -என அவரே மணிபோல் என்று இந்திரனது நீல நிறத்தைக் குறித்தார். எனவே, காஞ்சிப் பூ காமனைப் போன்றும், இந்திரனைப் போன்றும் நீல நிறமுடைய பூ. கண்ணாற் காண முடியாத காமனையும் காணாத இந்திரனையும் காட்டி இதன் நிறத்தைக் கூறினாலும், இக்காஞ்சிப் பூ அவர்களை தனது நிறத்தால் காண வைக்கின்றது. - - அழகிய இதன் மலரைக் கொத்தாகவே சூடுவர். வீழ் இணர்க் காஞ்சி' (அகம் : 336 : 7) என்றபடி விழுந்தாலும் கொத் தாகவே விழும். பறித்தே அணிவர். 'விளையாட்டு மகளிர் பலரும், தளிரும் முறிரும் தாதும் பூவும் கோடலால்சிதைவுப்பட்டுக் கிடந்தகாஞ்சி”2 -எனப்பட்டது. இவ்வாறுசிதையும் அளவு பயன்கொள்வர். சிதைந்த காஞ்சி' என்னும் பொருளில் பாலைக் கெளதமனார் “ததைந்த காஞ்சி" (பதிற்றுப்பத்து 23 19) என்று பாடினார். மகளிர் பயன் கொள்ள உழவர் குடி ஆடவர். இதன் கிளையை வளைத்துக் கொடுப்பர். 8 இதன் தளிர் குழுமையானது. இதனால் ஆடவரும் "காஞ்சிப் பணிமுறி ஆரங்கண்ணியொடு"4 விளங்குவர். இதன் தாதாம் மணச் சுண்ணம் பொன் நிறமானது. மலர்க் கொத்தில் அதிகமாகத் தோன்றும் "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் அழைக்குமாம்”5 குயில் குடைந்து நீராடுவதுபோன்று தன் உடலில் படியவைத்துக் கொள்ளும் அளவில் தாது உண்டு. தண்ணிரில் இறங்கி ஏறும் ஒர் எருமை தனது முதுகில் இத்தாதைக் கொண்டிருந்ததைப் பாடினர். இம்மணச் சுண்ணம் படிந்திருந்த ஒரு மணல் மேடு மணம் கமழ்ந்தது. இம்மேடு திருமண மேடைபோன்று, 1. திருவிளை, பு : இந்திரன் 13: 1, 2 2 பதிற். பத் : 28 ; 19 பழைய உறை 3 "உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினை காஞ்சி' - குறுந் : 10 : 4. 4. புறம் 844 : 8 5 கலி ; 84; 8,