பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284


காஞ்சிப் பைந்தாது அணிந்த போதுமலி எக்கர் வதுவை நாற்றம் புதுவது களுல விளங்கிற்றாம். பூங்கொத்தும் சுண்ணமும் குவிந்து கிடந்ததை உவமையாக்கி ஒர் எரு மன்றம் "காஞ்சித்தாது உக்க அன்ன தாது எரு மன்றம்" (கலி ; 108 : 60) எனப் பேசப்பட்டது. இச்சுண்ணத்தை மகளிர் விரும்பித் தமது உடலில் படிய விட்டுப் பொன் மெருக்கேற்றிக்கொள்வர். மணத்தில் மகிழ்வர். மலர்க் கொத்தைச்சூடிய கூந்தலில் இச்சுண்ணம் படுவதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது. இதனை, 'கோதை இன ர குரங்காற் காஞ்சிப் போது அவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்'? - என மதுரைப் பேராலவாயர் பாடும் அளவில் பயன்கொண்டனர். ஆற்றுப் பூவரசா? இக் காஞ்சி மரம் பிற்காலத்தவரால் ஆற்றுப் பூவரசு எனக் கருதப்பட்டது. ஆற்றோரத்தில் காஞ்சியும் வளரும். ஆற்றுப் பூவரசும் வளரும். இரண்டும் வெவ்வேறானவை. நாட்டுப் பூவரசு வகையைச்சார்ந்தது ஆற்றுப் பூவரசு. பூவரசின் பூப்போன்று அதே நிறத்திலும் அமைப்பிலும் அளவில் சற்றுச் சிறியதாகவும் இருக்கும். நிழலுக்கு வளர்க்கப்படும். தழைத்து வளரும். ஒரே பூவாக பூக்கும் தனிப்பூ இது. காஞ்சிப் பூ கொத்துப் பூ. இது முதல் வேறுபாடு. ஆற்றுப் பூவரசின் பூவின் நிறம் சற்றுக் கருமஞ்சள், காஞ்சிப் பூவின் நிறம் நீலம். இஃது அடுத்த மாறு பாடு.ஆற்றுப்பூவரசு மிகுந்த மணச்சுண்ணம் அற்றதாய்ச் சூடப் படாதது, காஞ்சி இரண்டும் கொண்டது. இது முரண்பாடு. எனவே, காஞ்சி ஆற்றுப் பூவரசு அன்று. ஆற்றுப் பூவரசு என்ற கருத்தால் ஆங்கிலத்தில் R1WER PORTA என்று ஒலிப்பொருத் தத்துடன் குறிக்கப்பட்டதும் தவறுடையதேயாகும். 1 அகம் : 25 3 - 5 2 அகம் : 296 :1,2,