பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285


காஞ்சி என்னும் சொல் பலபொருள் ஒருசொல். 'ஒருமரப் பெயரும் ஒரிசைப் பெயரும் கச்சிப் பதியும் கலையும் காஞ்சி' எனப் பிங்கலம் நான்கு பொருள்களைச் சுட்டுகின்றது. காஞ்சி மரப்பெயராயினும் அதன் பூவால்தான் புகழ் பெற்றது 'பூங் காஞ்சி' என்னும் சிறப்புத் தொடரே இதனைக் காட்டுவதாகும். காஞ்சிப் பெயர் கொண்ட இசை செவ்வழிப் பண்வகை யினது. போர்ப்புண் நலம்பெறவும், காற்றாவி அணுகாதிருக்கவும் 2 ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி' யதை அரிசில்கிழார் குறித்துள்ளார். காஞ்சிபுரம் இன்றும் இதன் பெயர் பெற்றொளிர்கின்றது. காஞ்சிப் பெயரில் ஆறு ஒன்றும் உள்ளது. 3 'காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே' என்று பரணரும் "மீகொங்கிவனி காஞ்சிவாய்ப் பேருர்’ எனத் திருநாவலுரரும் பாடினர். இவ்வாறு கோவை மாவட்டத் திலுள்ள பேரூர்க்கு அருகில் ஒடுவது. இந்நாளில் "நொய்யலாறு' என வழங்கப்படுகின்றது. காஞ்சியின்பெயரால் இரும்பல் காஞ்சி' என்னும் இலக்கண நூல் ஒன்று இருந்தது. இன்றும்பத்துப்பாட்டில் 'மதுரைக் காஞ்சி’ பெயர் பெற்று எத்துணையோ அருங்கருத்துக்களை அறிவித்துக் கொண்டுள்ளது. "ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி' 4 எனச் சாத்த னாரால் வண்ணிக்கப்படும் இது, நிறத்தாலும் மரத்தாலும் சிறப் பாலும் மணிக் காஞ்சியாக ஒரு தனியிடம் பெற்றதாகும். இக்காஞ்சி மரத்தில் கொடி படர்ந்ததில்லை. ஆனால் புறப்பொருளில் இதை யொட்டி ஒரு கொடி வருகின்றது. அஃது உழிஞை. - பிங், நி: 3343 புறம் 281 : 4, 5, சுத் தே : திருப்பேருர், பணி : 18:55, 56,